கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் 10 கிலோ ஆடு ரூ.5,000க்கு விற்பனை - விலை குறைந்ததால் விற்பனை மந்தம்!

கடும் வெப்பம் காரணமாக கன்னிவாடி ஆட்டுச்சந்தையில் கடந்த 2 வாரங்களாக ஆடுகள் விற்பனை குறைவாக இருந்து வந்த நிலையில், இன்றைய தினம் 10 கிலோ எடை கொண்ட ஆடுகள் ரூ.5,000க்கு விலை போனதால், விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனை செய்யாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த கன்னிவாடி ஆட்டுச்சந்தையில் ஆடுகளின் விலை குறைந்ததால், விவசாயிகள் ஆடுகளை விற்பனை செய்யாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

தமிழ்நாட்டில் நடைபெறும் முக்கிய ஆட்டுச்சந்தைகளில் ஒன்று கன்னிவாடி சந்தை. இந்த சந்தை வாரந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு கன்னிவாடி, மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.



அவற்றை வாங்குவதற்கு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, பொள்ளாச்சி, உடுமலை போன்ற நகரங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகிறார்கள். இதனிடையே கடந்த 2 வாரங்களாகவே கடும் வெப்பம் காரணமாக வியாபாரம் குறைந்து காணப்பட்டது.

அதன்படி நடந்த சந்தையில் 3,000 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. சந்தையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆடுகளுக்கு விலை குறைந்து இருந்ததால் ஆடுகளை விவசாயிகள் விற்பனை செய்யாமல் திருப்பி கொண்டு சென்றனர்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...