தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

சென்னையில் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பொது கூட்டத்தில், தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்தி மீது உக்கடம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.


சென்னை: தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகியான இடும்பாவனம் கார்த்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சென்னையை சேர்ந்தவர் இடும்பாவனம் கார்த்தி (32). இவர் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை செயலாளராக உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் உக்கடத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்தி, தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து உக்கடம் துணை ஆய்வாளர் ரேணுகா தேவி, உக்கடம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது உக்கடம் போலீசார் மத மோதல்களை தூண்டும் வகையில் பேசுதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...