சூலூரில் ஹெலிகாப்டர் மூலம் குளத்தில் தண்ணீர் எடுத்து தீயணைப்பு ஒத்திகை

சூலூரில் இந்திய ராணுவ படைக்கு சொந்தமான விமானப்படை தளம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஹெலிகாப்டர் மூலம் தீ விபத்தை கட்டுப்படுத்துவது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் பெரிய குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து தீயை அணைப்பது போன்று தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.


கோவை: சூலூரில் ஹெலிகாப்டர் மூலம் குளத்தில் தண்ணீர் எடுத்து தீயணைப்பு ஒத்திகை நடைபெற்றது.

கோவை மாவட்டம் சூலூரில் இந்திய ராணுவ படைக்கு சொந்தமான விமானப்படை தளம் செயல்பட்டு வருகிறது. இங்கு விமானப்படைகளில் பயன்படுத்தப்படும் விமானங்கள் உருவாக்குவது, விமான பயிற்சி, விமானப்படை பிரிவு ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாதம்தோறும் விமானப்படை விமானங்கள் மூலம் பேரிடர் கால ஒத்திகையானது நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த மாததத்திற்கான பேரிடர் கால ஒத்திகை சூலூரில் உள்ள பெரிய குளத்தில் நடைபெற்றது. அதன்படி தீ விபத்து ஏற்படும் போது எப்படி ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைப்பது என்பது குறித்து தத்ரூபமாக விளக்கப்பட்டது.

சூலூர் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் தீ விபத்தை கட்டுப்படுத்துவது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. அதன்படி சூலூர் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் சூலூர் பெரிய குளத்திற்கு சென்றது.

அங்கு வானில் வட்டமிட்டபிடியே ஹெலிகாப்டரில் இருந்து 2 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட ராட்சத கொள்கலனை கயிறு கட்டி கீழே இறக்கினர். பின்னர் அது கீழே வந்து குளத்தில் தண்ணீரை நிரப்பியதும், மீண்டும் மேலே எடுத்து செல்லப்பட்டு, விபத்து நடந்த இடத்தில் தண்ணீரை தெளித்து தீயை அணைப்பது போன்று தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது. இந்த ஒத்திகையை காட்சியை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் வியந்து பார்த்து சென்றனர்

Newsletter

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு

Coimbatore மாணவர்கள் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தல் நாளுக்கு முன்பும் பின்பும்...

மின் கட்டணக் குறைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தொழில் துறையினருக்கு அதிமுக வேட்பாளர்கள் உறுதி

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், அதிமுக கூ...

மின் கட்டணக் குறைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தொழில் துறையினருக்கு அதிமுக வேட்பாளர்கள் உறுதி

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், அதிமுக கூ...