தூத்துக்குடியில் விஏஓ படுகொலை - தாராபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடியில் மணல் கொள்ளை தொடர்பாக புகாரளித்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், மணல் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தாராபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் முறப்பநாடு கோவில் பத்து என்ற கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தவர் லூர்து பிரான்சிஸ்.

இவர் மணல் கடத்தியவர் மீது நடவடிக்கை எடுத்தபோது மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் அலுவலகத்தில் புகுந்து அவரை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவத்தை கண்டித்தும், கிராம நிர்வாக அலுவலரை கொலை செய்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தாராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். வட்டாரச் செயலாளர் விவேக் முன்னிலை வகித்தார். அப்போது கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு அஞ்சலி செலுத்தினர். அரசாங்க சொத்தை காப்பாற்றுவதற்கு அனைத்து நிலை அதிகாரிகளுக்கும் பொறுப்பு உள்ளது.

தவறு நடந்தால் கிராம நிர்வாக அலுவலர் மட்டுமே புகார் அளிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இதை மாற்றி தாசில்தார், சப்- கலெக்டர் என்ற அளவில் புகார் அளிக்கலாம் என்ற ஒரு தீர்மானத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என்றும், கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தாராபுரம் வட்டத்தில் உள்ள 50 கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...