சிறுவாணி ஆற்றில் தடுப்பணை - கேரள பேருந்துகளை மறித்து கோவையில் போராட்டம்!

கேரள அரசு, சிறுவாணி ஆற்றில் கட்டும் தடுப்பணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோவையிலிருந்து கேரளா செல்லும் கேரள போக்குவரத்து கழக பேருந்துகளை மறித்து அனைத்து கட்சிகளின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது கேரள அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.


கோவை: கோவைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி ஆற்றில் கேரள மாநிலத்தில் அட்டப்பாடி அருகில் கூலி கடவு என்ற பகுதியில் கேரளா அரசு தடுப்பணையை கட்டி வருகிறது. 90% பணிகள் முடிந்து விட்ட நிலையில் மேலும் இரண்டு அணைகள் கட்ட ஆயத்தமாகி வருகின்றனர்.



இந்த அணை கட்டுவதால், கோவை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு என்பது அதிகமாகவே நிலவும் அபாயம் உள்ளது. இந்த தடுப்பணை கட்டுவதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.



இந்நிலையில், தடுப்பணையை அகற்றக்கோரியும் சிறுவாணி அணைக்கு வரும் தண்ணீரை தடுக்கும் கேரள அரசை கண்டித்தும் கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் திராவிட கழக அலுவலுகம் முன்பு தந்தை பெரியார் திராவிட கழகம், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,தமிழ் புலிகள், எஸ்.டி.பி.ஐ , மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சியினர் ஒன்றிணைந்து கேரளா போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும், 50 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்க கேரள அரசு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து, பேருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...