முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் - கோவை ஆட்சியரிடம் வழங்கிய யாசகர்!

தூத்துக்குடியைச் சேர்ந்த பூல்பாண்டியன் என்ற முதியவர், தான் யாசகமாக பெற்ற 10 ஆயிரம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்காக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியிடம் அளித்தார்.


கோவை: தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன் (வயது75). மனைவி மறைந்த நிலையில், ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். 1980 முதல் மும்பையில் வேலை பார்த்து வந்த இவர், 2019ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் மஸ்கோத் அல்வா தயாரிப்பு கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அன்று முதல் இவர், தான் யாசகமாக பெற்ற தொகையை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கவும் கல்வித்தொகை வழங்கவும் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.



இந்நிலையில், கொரோனா தொற்றுக்குப்பின், தான் யாசகமாக பெரும் தொகை, ரூ.10 ஆயிரமாக சேர்ந்தவுடன் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களிடமும் அவ்வப்போது முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

சாமியார் போல தோற்றமளிக்கும் இவர், கோயில்களில் தங்குவதை காட்டிலும் காவல்துறை பாதுகாப்புடன் இருக்கக்கூடிய இடங்களான பேருந்து நிலையங்கள், முக்கிய சாலை சந்திப்புகள், ரயில் நிலையங்கள் ஆகிய இடங்களில் தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.



இதுவரை 35க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று மாவட்ட ஆட்சியர்களிடம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தொகைகளை வழங்கியுள்ள இவர், இன்று கோவை வந்து, தான் யாசகமாக பெற்று சேர்த்துவைத்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்காக ஆட்சியரிடம் வழங்கினார்.

Newsletter

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆழியாறு அணையில் 59.65 அடி,...