உதகைக்கு வயது 200 - சாலையோரத்தில் கவரும் வண்ண ஓவியங்கள்!

உதகைக்கு 200 ஆண்டுகள் நிறைவடைதை முன்னிட்டு முக்கிய சாலை ஓரங்களில் வரையபட்டு வரும் வண்ண ஓவியங்கள் காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.



நீலகிரி: மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறை சார்பில் சாலையோரங்களில் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

மலைகளின் அரசி என்றழைக்கபடும் உதகையை 200 ஆண்டுகளுக்கு ஜான் சலிவன் என்ற கோவை மாவட்ட ஆட்சியர் வெளிஉலகிற்கு அறிமுகம் செய்து வைத்ததுடன் உதகை நகரத்தையும் கட்டமைத்தார்.

அதன் பின்னர் தாவரவியல் பூங்கா போன்ற முக்கிய சுற்றுலா தலங்கள் உருவாக்கபட்டு பிரபலமடைந்தது.

தற்போது ஆண்டிற்கு 30 லட்சம் பேர் சுற்றி பார்த்து செல்கின்றனர். இந்த நிலையில் உதகை நகருக்கு 200 ஆண்டுகள் நிறைவடைதுள்ளது. அதனை தமிழக அரசு10 கோடி ஒதுக்கி அரசு விழாவாகவே கொண்டாடி வருகிறது. மேலும் மே மாதம் நடைபெறும் நிறைவு விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்கிறார்.



இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தின் இயற்கை காட்சிகளையும், வனவிலங்குகளையும் பாரம்பரிய சின்னங்களையும் சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் உதகை நகரில் உள்ள தடுப்புச் சுவர்களில் வர்ணங்கள் பூசப்பட்டு அதில் ஓவியங்களாக வரையப்பட்டு வருகிறது.



குறிப்பாக சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே யானை, புலி, மான் வரையாடு, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளின் ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டு வருகிறது.

அந்த வண்ண ஓவியங்களை உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்து வருவதால் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

Newsletter

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...

கிணத்துக்கடவு இளைஞர் கொலை வழக்கில் கைதான மாதேஷ் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை...

Kinathukadavu Murder Accused Detained Under Goondas Act

Mathesh, 21, who was arrested in connection with the murder of a 22-year-old man in Kinathukadavu, Coimbatore district,...

Coimbatore Police Constable M. Vijay Wins Gold at State-Level Anti-Sabotage Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS) won the gold medal in t...