கிணத்துக்கடவு அருகே பெயிண்டர் தற்கொலை - குடிப்பழக்கத்தை கைவிட முடியாமல் விபரீதம்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே பெயிண்டர் ஆனந்த குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குடிப்பழக்கத்தை நிறுத்துவது தொடர்பாக மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து இந்த முடிவை எடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூர், தோட்டத்து சாலையில் குடியிருந்து வந்தவர் ஆனந்தகுமார் (வயது 38). இவர் பெயிண்டிங் வேலை செய்து செய்து வந்தார். இவருக்கு பாரதி (31) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

ஆனந்தகுமாருக்கு குடிபழக்கம் உள்ளதால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில், அவரது குடும்பத்தினர் அவருக்கு அறிவுரை கூறியும் கேட்காமல் மீண்டும் வேலைக்கு செல்லாமல், மதுப்பழக்கத்தை கைவிடாமல் இருந்துள்ளார். இதனால், நேற்று காலை ஆனந்தகுமார் மனைவி பாரதி குழந்தைகளுடன் கோவைக்கு சென்றார். வீட்டில் ஆனந்தகுமார் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

கோவைக்கு சென்ற பாரதி வீட்டுக்குவந்து பார்த்தபோது ஆனந்தகுமார், தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆனந்தகுமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அவரது மனைவி கொண்டு சென்றார்.

அங்கு, பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ஆனந்தகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...