கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் விபத்துகளை குறைக்கும் வண்ணம் 5 இடங்களில் வேகத்தடை - பொதுமக்கள் வரவேற்பு!

கோவை மாவட்டம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் விபத்துக்களை குறைக்கும் விதமாகவும், பொதுமக்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் பாதுகாப்புக்காகவும், 5 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


கோவை: ரேஸ்கோர்ஸ் பகுதியில் விபத்துக்களை குறைக்கும் விதமாக 5 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சியில் ரேஸ்கோர்ஸ் முக்கிய பகுதியாகும். இங்கு நடைபயிற்சி மற்றும் ஓட்டப் பயிற்சி, சைக்கிளிங் என உடற்பயிற்சிக்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இதன் காரணமாக ரேஸ்கோர்ஸ் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேம்படுத்தப்பட்டு புதுப்பொலிவு பெற்று திகழ்கிறது. இங்கு இளைஞர்களுக்கு ஜிம், குழந்தைகளுக்கு விளையாட்டு பூங்கா மற்றும் கண்கவர் மின் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஸ்கோர்ஸ் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படுகிறது.

ரேஸ்கோர்ஸ் சாலையும் புதுப்பிக்கப்பட்டு வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல வழி வகை செய்யப்பட்டு உள்ளது. இதனால் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் சீறிப்பாய்ந்து செல்கின்றன.

இவ்வாறு வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்துகளும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. சில இடங்களில் பாதசாரிகள் சாலையை கடக்க முடியாமல் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

வேகமாக செல்லும் வாகனங்களுக்கு கடிவாளம் போடும் வகையிலும், விபத்துகளை தடுக்கும் வகையிலும் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து போலீசார் வேகத்தடை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்தனர். அதன்படி ரேஸ்கோர்சை சுற்றியுள்ள சாலையில் 5 இடங்களில் நேற்று நெடுஞ்சாலை துறையினர் வேகத்தடை அமைத்தனர். வேகத்தடைகளுக்கு பொதுமக்களும், நடை பயிற்சி மேற்கொள்பவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது, இந்த சாலையில் காலை முதல் இரவு வரை அதிகமான வாகனங்கள் செல்கின்றன. மேலும் வாகனங்கள் அனைத்தும் அதிவேகமாக செல்வதால் தினமும் விபத்துகள் நடைபெற்று வந்தது.

வேகத்தடை அமைக்கப்பட்டதால் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் வேகத்தை குறைத்து செல்கின்றன. மேலும் எண்ணற்ற விபத்துக்கள் தவிர்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...