கோவையில் ரூ.19.50 லட்சம்‌ மதிப்பில் பாலம் கட்டும் பணியை துவங்கி வைத்த மேயர் கல்பனா!

கோவை மேற்கு மண்டலத்தில் ரூ.19.50 லட்சம்‌ மதிப்பில் பாலம் கட்டும் பணியை தொடங்கி வைத்த மேயர் கல்பனா ஆனந்தகுமார், பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு மழைநீர் வடிகாலில்‌ தேங்கியுள்ள செடி, கொடிகளை அகற்றி புனரமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கோவை‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.35க்கு உட்பட்ட இடையர்பாளையம்‌, அன்புநகர்‌ 5வது வீதியில்‌ நாடாளுமன்ற உறுப்பினர்‌ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.19.50 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைக்கப்பட உள்ள பால‌த்திற்கான கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில், மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ பூமிபூஜை செய்து, பணியினை தொடங்கி வைத்தார்‌.



இதேபோல், கோவை மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்‌.45 சாய்பாபா காலனி, அண்ணா மார்க்கெட்‌ பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ மழைநீர் வடிகாலில்‌ தேங்கியுள்ள செடி, கொடிகளை அகற்றி பழுதடைந்த மழைநீர் வடிகாலை புனரமைக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.



தொடர்ந்து கோவை மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட‌ வார்டு எண்‌.45 சாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம்‌ சாலை, புதிய பேருந்து நிலையத்தில்‌ பயணிகள்‌ பயன்பாட்டிற்காக உள்ள கழிவறை சுகாதாரமாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்ட மேயர் கல்பனா, கழிவறையை சுகாதாரமாக பராமரித்திட சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளருக்கு அறிவுறுத்தினார்‌.



இதேபோல், மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.45க்கு உட்பட்ட சாய்பாபா காலனி, அம்மாசைகோனார்‌ வீதியில்‌ ஆய்வு மேற்கொண்டு மழைநீர் வடிகாலில்‌ உள்ள செடி, கொடிகளை அகற்ற பழுதடைந்த மழைநீர்‌ வடிகாலை புனரமைக்க மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.

இந்த நிகழ்வுகளில், மேற்கு மண்டல தலைவர்‌ தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர்கள்‌ சம்பத்‌, ராமமூர்த்தி, உதவி ஆணையர்‌ சேகா்‌, உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா, உதவி பொறியாளர்‌ ஜீவராஜ்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...