பவானியின் குறுக்கே கேரள அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் வாழ்வாதரமாக விளங்கும் பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கோவை மாவட்ட மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை சிங்காநல்லூர் அருகே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 25-வது கோவை மாவட்ட பொதுக்குழு இன்று நடைபெற்றது. இப்பொதுக்குழுக் கூட்டத்திற்க்கு அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை வகித்தார்.

இதில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளராக கணேசமூர்த்தி, கழகத் துணைப் பொதுச் செயலாளராக ஏ.கே.மணி, ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களாக டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், டாக்டர் க.சந்திரசேகரன், மு.பூமிநாதன், க.ஜெய்சங்கர் ஆகியோர் ஒருமனதாகத் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் பல்வேறு நீர்நிலைகள், கண்மாய்கள், ஆற்றுப் படுகைகள் மற்றும் தரிசு நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பற்றிப் படர்ந்து வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும்.

குறிப்பாக சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் தமிழக இளைஞர்களும், மாணவர்களும் தங்களை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு பாடுபட்டு, வருங்காலத் தமிழகத்தை வளமாக்கிட வேண்டும்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் வாழ்வாதரமாக விளங்கும் பவானி ஆற்றின் குறுக்கே, தேக்குவட்டை, மஞ்சக்கண்டி ஆகிய இடங்களில் தடுப்பு அணைகளைக் கட்டும் முயற்சியில் கேரள அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. மேலும் பாடவயல், சீரக்கடவு, சாவடியூர், சாலையூர் ஆகிய இடங்களிலும் அணைக் கட்டத் திட்டமிட்டுள்ளனர்.

 

பவானியின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை மத்திய அரசும், மாநில அரசும் உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருவ மழை பொய்த்ததாலும், அண்டை மாநிலங்கள் வஞ்சித்ததாலும், தமிழ்நாட்டின் ஆறுகள் வறண்டுவிட்டன. போதுமான தண்ணீர் இன்றிப் பயிர்கள் காய்ந்து கருகியதால் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு உயிர் இழந்துள்ளனர். 

தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரணப் பலன்கள் இரண்டு ஹெக்டேருக்கு அதாவது ஐந்து ஏக்கருக்குக் கீழே உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த உச்சவரம்பைத் தளர்த்தி, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சம் இன்றி வறட்சி நிவாரண நிதி உள்ளிட்ட பயன்கள் வழங்க வகை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...