கோவைபுதூர் பத்திரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா

கோவைபுதூர் பத்திரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கோலாகலமாக தொடங்கிய நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திறக்கும் நிகழ்ச்சி வரும் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை புதூர் பத்திரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது.

கோவையை அடுத்த கோவைபுதூர் என் பிளாக்கில் ஸ்ரீபத்திரகாளி அம்மன், ஸ்ரீகருப்பராயர், ஸ்ரீ குரு சக்தி நாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதேபோல், இந்த ஆண்டு 14-வது ஆண்டு சித்திரை குண்டம் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது. இன்று காலை 4.30 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, காலை 7 மணிக்கு கோ பூஜையும், 7:45 மணி அளவில் சப்த கன்னி பூஜையும் நடைபெற்றது.

இநிலையில், மாலை 6.30 மணி அளவில் நாக பிள்ளையார் கோவிலில் இருந்து கொடிக்கம்பம் ஊர்வலமாக எடுத்து வந்து பத்ரகாளி அம்மன் கோவிலில் கொடி ஏற்றத்துடன் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையடுத்து நாளை புதன்கிழமை மாலை 7 மணி அளவில் பிரத்தியங்கரா தேவி ஹோமம் நடைபெற உள்ளது. பின்னர் 20ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 6.45 மணி முதல் மாலை 8 மணி வரை சண்டி பூஜை, ஹோமம் நடைபெறுகிறது.

மேலும், 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணி அளவில் குண்டம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 22ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.45 மணியளவில் குருதி பூஜை நடைபெற உள்ளது.

23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.35 மணிக்கு நாக பிள்ளையார் கோவிலில் இருந்து பட்டு, படைக்கலன், தீர்த்தக்குடம் ஆலயத்திற்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

24ஆம் தேதி திங்கட்கிழமை காலை 4 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெற உள்ளது. பின்னர் சிறப்பு பூஜையும், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

காலை 8.45 மணிக்கு குண்டத்திற்கு பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு சகல வித வாத்தியங்களுடன் சக்தி கரகம் எடுக்க கோவிலில் இருந்து குளத்துப்பாளையம், கோகுலம் காலனி, பொன்னுசாமி கவுண்டர் தோட்டத்திற்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மதியம் 12 மணிக்க உச்சி பூஜையும் அன்னதானமும் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு சகல வித வாத்தியங்களுடன் பொன்னுசாமி கவுண்டர் தோட்டத்திலிருந்து சக்தி கரகம் எடுத்து கோவைப்புதூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இரவு 8 00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு மகா அபிஷேகமும் அலங்கார பூஜையும் நடைபெறுகிறது. 10 மணிக்கு மேல் பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

மதியம் 12 மணிக்கு உச்சி பூஜையும், கருப்பராயர் காவடி எடுத்து விளையாடுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மதியம் 3 மணிக்கு மேல் நாக பிள்ளையார் கோவிலில் இருந்து மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீட்டு விழாவும், 5 மணிக்கு கரகம் கரைப்பதற்கு புறப்பட்டு கோவைபுதூர் ஓம் சக்தி நகர் குளத்து தோட்டத்திற்கு செல்லுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 7.45 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்ற பின்பு கோவில் நடை அடைப்பு நடைபெறும்.

பின்னர் மே மாதம் 1ஆம் தேதி திங்கட்கிழமை காலை 5 மணிக்கு வழக்கம் போல் நடை திறக்கப்படும். அன்று மதியம் 12 மணிக்கு கருப்பராயருக்கு உச்சி பூஜை நடைபெறும். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ சித்தர் சக்திநாதர் அறக்கட்டளை நிறுவனர் ஆம் ஸ்ரீ சிவஜோதி சித்தரையா செய்து வருகிறார்.

மேலும் பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு பத்திரகாளி அம்மன் அருளை பெற்று செல்லுமாறு விழா குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...