கோவை முதல் விற்பனையகத்தை தொடங்கும் ஆர்ட்டினாக்ஸ் மாடுலர் கிச்சன்ஸ்

ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் நவீன மாடுலர் கிச்சன்களை தயாரித்து வழங்கும் ஆர்ட்டினாக்ஸ், அதன் முதல் காட்சியகத்தை இன்று கோவை மாவட்டம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் தொடங்கியுள்து. 



இதன் துவக்க விழாவில் பிரபல திரைப்பட இயக்குனரான பாலா, கோவை மாநகரின் காவல்துறை உதவி ஆணையர் அனிதா, பிரபல திரைப்பட நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஆர்எம்பி கம்ப்ரஸர்ஸ்-ன் பிரைவேட் லிமிடெட்-ன் நிர்வாக இயக்குநரான தேவிகா ரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று விற்பனையகத்தினை துவக்கி வைத்தனர்.

இந்த விற்பனை மையத்தில் மாடுலர் கிச்சன்கள் டேபிள்வேர், வார்ட்ரோப்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீ; பர்னிச்சர், கண்ணாடிகள் மற்றும் வேனிட்டிஸ் என பல்வேறு வகைகளில் ஆர்ட்டினாக்ஸ் பிராண்டின் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.



இந்நிகழ்ச்சியில் கோவை ஆர்ட்டினாக்ஸ் காட்சியகத்தின் பங்குதாரர் அருண் நாகராஜ் பேசுகையில், "இந்திய சமையலறைகள் மற்றும் சமையல் பழக்கவழக்கங்கள் மாறியிருக்கின்றன. இந்தியர்கள் விரும்புகிற சமையலறைகளின் வகை மற்றும் விருப்பத்தேர்வில் குறிப்பிடத்தக்க நகர்வு கண்கூடாக தெரிகிறது. இன்றைய காலகட்டத்தில் சமையலறைகள் என்பவை மெல்லியதாக, நவீன தோற்றத்துடன் ஸ்டைலானதாக, நடைமுறை வசதி கொண்டதாக தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்டதாக இருப்பது அவசியமாகும்.

100 சதவிகிதம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் உருவாக்கப்பட்டுள்ள சமையலறைகளின் வழியாக இத்தேவையை இந்த பிராண்டு பூர்த்தி செய்ய விழைகிறது. ஒற்றை வடிவமைப்பில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டேபிள் டாப்புடன் சிங்க் மற்றும் ஒரு ஐலேண்ட் சிம்னி, ஒருங்கிணைக்கப்பட்ட பிற சாதனங்கள், சமையல் பணி மேற்கொள்வதற்கு ஒரு தாராளமான இடவசதி மற்றும் விருப்பத்திற்கேற்ற பிரத்யேக வண்ணத்தில் கிடைப்பது ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு இங்கு கிடைக்கக்கூடிய ஈர்ப்பு அம்சங்களாக இருக்கின்றன" என்று கூறினார். 



ஜின்டால் ஸ்டெயின்லெஸ் லிமிடெடின் தலைமை செயல் அலுவலர் டோமி செபாஸ்டியன் பேசுகையில், "இந்திய வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களின் தேவைகள் மாறி வருகின்றன. மாடுலர் கிச்சன்கள், பிரிமீயம் வீட்டு அலங்காரம் ஆகியவற்றின் மீது செலவு செய்யவும், அவர்கள் முதலீடு செய்யவும் அவர்கள் தயாராக இருக்கின்றனர்.

ஆர்ட்டினாக்ஸ், இந்திய சந்தைகளுக்கு நவீன மாடுலர் கிச்சன்களை ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் வழங்குகிறது. ஈரமான மற்றும் எண்ணெய் நிறைந்த இந்திய சமையல் நிலைகளுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கிச்சன் நவீன மாடலாகவும், நேரோடியாகவும் மற்றும் குறைந்த அளவுள்ளதாகவும், அதேவேளையில் நமது பாரம்பரிய தேவைகளை பூர்த்திசெய்ய கவனம் செலுத்துவதாகவும் இருக்கிறது" என்றார்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...