திருப்பூர் வழக்கறிஞர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்!

வழக்கறிஞர்களின் பாதுகாப்பு சட்டத்தை உறுதி செய்யும் வகையில், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிட வலியுறுத்தி திருப்பூரில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர்: தமிழகத்தில் சமீப காலமாக வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் வழக்கறிஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஒரு சில வழக்கறிஞர்கள் கூலிபடைகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.



எனவே, தமிழக வழக்கறிஞர்களின் பாதுகாப்பு சட்டத்தை உறுதி செய்ய , தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி திருப்பூரில் வழக்கறிஞர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...