எம்.பி.பி.எஸ் சீட்டு வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி - கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி!

மருத்துவ படிப்பிற்கான சீட்டு வாங்கி தருவதாக கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்த கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பிர்தோஸ் சலாவுதீன் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்ட விமலா என்ற பெண், கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: எம்.பி.பி.எஸ் சீட்டு பெற்று தருவதாக கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண் ஒருவர் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர்கள் தன செல்வன் - விமலா தம்பதி. தனச்செல்வன் சென்னை மத்திய தூல் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்.

இந்நிலையில், இவர்களது மகனுக்கு சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் எம்.பி.பி.எஸ், சீட் வாங்கி தருவதாக கூறி கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள எஸ்.எல்.ஆர். டூட்டி பெய்டு ஷாப் நடத்தி வந்த பிர்தோஸ் சலாவுதீன் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு 23 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுள்ளார். ஆனால் மருத்துவ படிப்பு சீட்டு வாங்கித் தராமல் வெகு நாட்களாக அலைக்கழித்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

இது குறித்து கோவை ராமநாதபுரம் காவல் நிலையம், ஐஜி அலுவலகம், ஆணையாளர் அலுவலகம், முதலமைச்சர் தனி பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிங்காநல்லூர் காவல் நிலையம் என அனைத்திலும் தொடர்ந்து மூன்று வருடங்களாக புகார் அளித்து வந்துள்ளார்.

இந்நிலையில், புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மனவேதனை அடைந்த விமலா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.



அப்போது, அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக அவர் மீது நீரை ஊற்றி காப்பாற்றினர்.

இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தற்கொலை முயற்சி மேற்கொண்ட பெண்ணை காவல்நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

Newsletter

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...