பொள்ளாச்சி - கோவை சாலையில் ரூ.7 கோடி மதிப்பில் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் துவக்கம்!

பொள்ளாச்சி - கோவை சாலையில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜையை திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்



கோவை: பொள்ளாச்சி - கோவை சாலையில் அமைக்கப்பட உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் உட்மைப்பு வசதிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி உள்ளிட்ட 7 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைப்பதற்கு தமிழக முதல்வர் நிதிஒதுக்கீடு செய்தார்.



இதனையடுத்து பொள்ளாச்சி நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் நடவடிக்கையாக கோவை சாலையில உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், நகர மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.



3.2 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள பேருந்து நிலையத்தில் 40 பேருந்துகள் நிறுத்தும் வசதி, 64 கடைகள், 2 தங்கும் விடுதிகள், பாதுகாப்பு அறை, பாலூட்டும் அறை, போக்குவரத்து அலுவலகம், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் 18 மாத காலத்திற்குள் நிறைவடையும் என நகர மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...