பக்ரைனில் விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட புதுக்கோட்டை இளைஞர் - நேரில் நலம் விசாரித்த அமைச்சர் செஞ்சிமஸ்தான்!

பக்ரைனில் சாலை விபத்தில் சிக்கி தவித்துவந்த புதுக்கோட்டை இளைஞர் வீரபாண்டி மீட்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று நலம் விசாரித்து, ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் அளித்தார்.


புதுக்கோட்டையை சேர்ந்த வீரபாண்டி (வயது 25) பக்ரைன் நாட்டுக்கு சென்று வேலை செய்தபோது வாகன விபத்தில் சிக்கி, கடந்த நான்கு மாதமாக மீட்க முடியாமல் அங்கேயே சிகிச்சை பெற்றுவந்தார்.

இது தொடர்பாக, வீரபாண்டியின் பெற்றோர், வெளிநாடு வாழ் தமிழர்நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து, அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கையால், இளைஞர் வீரபாண்டி அங்கிருந்து விமானம் மூலம் அழைத்துவரப்பட்டு, சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமணையில் சேர்க்கப்பட்டுள்ளார்.



இந்நிலையில், சிகிச்சை பெற்றுவரும் இளைஞர் வீரபாண்டியை, வெளிநாடு தமிழர் நலன் அமைச்சர் செஞ்சி மஸ்தான், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று அரசு சார்பில் நலம் விசாரித்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் செந்தில் மஸ்தான் பேசியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வீரபாண்டி என்பவர் தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக பக்ரைன் சென்ற இடத்தில் அவருக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக இன்றைக்கு உயிருக்கு போராடக்கூடிய நிலையில் தந்தை சுப்பையா மற்றும் தாய் அழகி இருவரும் நேரடியாக தன்னுடைய மகனின் நிலையை தெரிவித்தனர்.

பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அந்த சகோதரனை அங்கிருந்து மீட்டு, தமிழக அரசு சார்பாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்றைக்கு அனுமதிக்கப்பட்டு தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

மருத்துவ குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கும் வகையில் முதலவர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். அதற்கு உறுதுணையாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேவையான வசதிகளை செய்து வருகிறார். இளைஞர் வீரபாண்டி உடல் நலம் குணமாக இந்த மருத்துவம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது.

விமான நிலையத்திலிருந்து அவரை பார்த்தற்கும் தற்போது மருத்துவமனையில் பார்ப்பதற்கும் அவர் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார். முத்தமிழ் அறிஞர் கலைஞர் 2017ஆம் ஆண்டு, வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு ஒரு பாதுகாப்பான நிலை வேண்டும் என்று ஒரு ஆணையும் அமைத்தார். அங்கே வேலைக்காக சென்றவர்கள் உயிரிழக்க நேரிடும் நிலையில், அவர்கள் உடல்கள் இங்கு எடுத்துவரப்பட்டு அவர்கள் பெற்றோர் இடத்தில் சேர்க்கப்பட்டு வருகிறது.

இதற்கு தனித் துறை இருக்கும் காரணத்தினால் சூடான், இந்தோனேசியா, உக்ரைன், துபாய் போன்ற நாடுகளில் வேலைக்குச்சென்று சிக்கித் தவிப்பவர்களின் நிலையை அறிந்தால், அவர்களை மீட்டு வர அயலர்கள் தமிழர்கள் நல வாரியம் என்று தனி வாரியமே அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.



அமைச்சரின் (செஞ்சி மஸ்தான்) சொந்த செலவில் இருந்து 50,000 ரூபாய் வீரபாண்டியன் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து வீரபாண்டியின் தாய் அழகு பேசுகையில், என் மகனை பக்ரைன் நாட்டுக்கு அனுப்பினோம். அவருக்கு விபத்து ஏற்பட்ட நிலையில், அமைச்சர் மூலமாகமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அமைச்சர் சொந்த செலவில் ரூ.50 ஆயிரம் வழங்கினார். எனது மகன் வீரபாண்டி நல்ல முன்னேற்றத்துடன் நலமாக உள்ளார், என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...