தாராபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி - போலீசார் விசாரணை

தாராபுரம் அருகே விவசாய நிலத்தில் புதிதாக வெட்டப்பட்டு வந்த கிணற்றில், கரூர் அருகே ஆனைகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை அடுத்துள்ள நந்தவனம்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி ஈஸ்வரன். இவர் தனது தோட்டத்தில் புதிதாக கிணறு அமைத்து வருகிறார்.

கிணறு வெட்டும்பணியில் காணிக்கம்பட்டி கரூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், சில தொழிலாளர்கள் கிணற்றின் அருகிலேயே கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று காலையில் கூடாரத்தில் தங்கியிருந்த கரூர், பாளையம் அருகே உள்ள ஆனைகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பெருமாள் (வயது 45), என்பவரைக் காணவில்லை.

அக்கம் பக்கத்தில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், சந்தேகமடைந்து 70அடி ஆழமுள்ள கிணற்றில் தேங்கியிருந்த தண்ணீரை அப்புறப்படுத்தி பார்த்தனர். அப்போது இறந்த நிலையில் பெருமாள் கிணற்றில் சடலமாகக் கிடந்தார்.

இது குறித்து குண்டடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தீயணைப்புதுறையினர் மூலம் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அதில், தொழிலாளி பெருமாள் இரவில் தவறுதலாக கிணற்றுப் பக்கம் சென்று தவறி விழுந்தது இறந்தது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...