கோவை அருகே 7வது நாளாக எரியும் காட்டுத் தீ - மாலைக்குள் கட்டுப்படுத்தப்படும் என வனத்துறை தகவல்

கோவை ஆலாந்துறை மேற்குதொடர்ச்சி மலையில் 7 ஆவது பற்றி எரியும் காட்டு தீ, இன்று மாலைக்குள் அணைக்கப்பட்டுவிடும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 90 சதவீத தீ ஏற்கனவே அணைக்கப்பட்ட நிலையில், இன்று கூடுதல் பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை ஆலாந்துறை நாதேகவுன்டன்புதூர் பகுதி மேற்குதொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த 11 ஆம் தேதி காட்டு தீ பரவியது.

சுமார் 150 ஹெக்டேர் பரப்பரளவில் பற்றியெரிந்த தீயை அணைக்கும் பணியில், கோவை, உடுமலை, நீலகிரி, ஈரோடு, சிறுமுகை உள்ளிட்ட வனச்சரகத்தில் இருந்து வந்த சுமார் 250க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் ஈடுபட்டனர்.



இந்நிலையில் காட்டுத் தீயை அணைக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் படி இராணுவ ஹெலிகாப்டர் மூலம் தீ அணைக்கும் பணி நடைபெற்றது. ஹெலிகாப்டர் மூலம் சுமார் 22 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொண்டு, அதிகளவு தீ பிடித்து எரிந்த 4 இடங்கள் முழுமையாக அணைக்கப்பட்டது.



இந்த விபத்தில், 15 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த மரங்கள், செடிகொடிகள், முழுமையாக தீக்கு இரையாகியுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு வரை 90 சதவீதம் தீ அணைக்கப்பட்டது.



இதைத் தொடர்ந்து, இன்று மீண்டும் சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கூடுதல் பணியாளர்களுடன் 7 ஆவது நாளாக தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மாலைக்குள் முழுமையாக தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்படும் என வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...