உடுமலையில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கிய முன்னாள் அமைச்சர்!

உடுமலை சட்டமன்ற அலுவலகத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின் பேரில், புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை முன்னாள் அமைச்சரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை ராதாகிருஷ்ணன் நிர்வாகிகளுக்கு வழங்கினார்.



திருப்பூர்: உடுமலையில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவம் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரும் எடப்பாடி பழனிச்சாமி, அறிவுறுத்தலின் பேரில், அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை முன்னாள் அமைச்சரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் நிர்வாகிகளுக்கு வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் உடுமலை நகரச் செயலாளர் ஹக்கீம், குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் பிரனேஷ் மற்றும் முருகேசன், அன்புராஜன், பொள்ளாச்சி ஒன்றிய செயலாளர்கள் ஆவல்பட்டி நடராஜ், இளஞ்செழியன், சோமசுந்தரம், சின்ன பாலு, பேரூராட்சி செயலாளர்கள் நரி முருகன், சுந்தர்ராஜ், சித்ரா, பல்லடம் ஒன்றிய செயலாளர் சித்தி ராஜ், பொங்கலூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, சிவப்பிரகாசம், மாவட்ட ஆவின் சேர்மன் வழக்கறிஞர் மனோகரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் துபாய் ஆறுமுகம், அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் நாகராஜ் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...