திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படும் - எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த அதிமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது ஆனால், திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படும் என தெரிவித்தார். மேலும், சட்டமன்றத்தில் அதிமுகவினர் பேசுவது முற்றிலுமாக நீக்கப்படுகிறது என குற்றம் சாட்டினார்.


கோவை: திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணாமலை திமுக ஊழல் பட்டியல் வெளியிடுவது குறித்த கேள்விக்கு அது அண்ணாமலை வெளியிட்ட பிறகு தான் தெரியும்என பதிலளித்தார்.

நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவது எல்லாம் நீக்கி விடுகிறார்கள். அரசாங்கத்திற்கு எதிராக நடக்கின்ற சம்பவங்களை நாங்கள் சட்டமன்றத்தில் எடுத்து வைத்து பேசினால் அதனை நீக்கி விடுகிறார்கள்.

சட்டம் ஒழுங்கு சரியில்லை என தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் திமுக ஆட்சி வந்த பிறகு சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு போன்றவை தொடர்ந்து நடைபெறுகிறது.

விருதாச்சலம் பகுதியில் பள்ளி சிறுமிக்கு நடைபெற்ற, பாலியல் வன்கொடுமை குறித்து நாங்கள் தெரியப்படுத்திய படுத்தினோம். ஆனால் முதலமைச்சர் சட்டமன்றத்தில் தகவல் கிடைத்ததும் fir பதிவு செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கிறார். ஆனால் தகவல் கிடைத்ததும்

Fir பதிவு செய்யப்படவில்லை, குற்றம் சாட்டப்பட்டவர் 30 வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பதால் அவரை தப்பிக்க வைக்க முயற்சி செய்தார்கள்.

ஆனால் அதிமுகவினரும் பொதுமக்களும் ஒன்று சேர்ந்ததால் அவர் மீது வேறு வழியில்லாமல் fir பதிவு செய்துள்ளார்கள். சட்டப்பேரவையில் எனக்கு முன்னால் பேசியதும் எனக்கு பிறகு பேசியதும் உள்ளது ஆனால் நான் பேசியதை நீக்கி விட்டார்கள். அங்கு ஜனநாயகம் கிடையாது.

திமுகவினர் ஜனநாயகத்தை மதித்தால் தான் மக்கள் இவர்களை மதிப்பார்கள். இவர்கள் ஜனநாயகத்தை மதித்தால் தானே மற்றவர்களை பற்றி பேச முடியும் இவர்களுக்கு அந்த தகுதி இல்லை.

தமிழகத்தில் நாங்கள் தடையில்லா மின்சாரம் கொடுத்து வந்தோம், விவசாயிகளுக்கு மும்முனை மின்சார இணைப்போம் வழங்கினோம். திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படும்.

இவர்களது நிர்வாக திறமை இல்லாத காரணத்தினால் தான் தமிழகத்தில் மின்வெட்டு வந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

தமிழ்நாடு முழுவதும் ஒருவரே பார்களை எடுத்துக் கொண்டுள்ளார். அது யார் என அனைவரும் தெரியும். அதிமுக ஆட்சி காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் தான் மது விற்பனை நடைபெற்றது, அதனை மீறி செயல்பட்டால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.

ஆனால் தற்பொழுது 24 மணி நேரமும் செயல்பட்டு மதுகடைகள் வருகிறது. தற்போது காவல்நிலையத்தில் புகார் அளித்தும் கூட வழக்கு பதிவு செய்யப்படாமல் உள்ளது. இப்படி இருக்கும் போது போராடும் மக்களுக்கு எப்படி காவல்துறையில் நியாயம் கிடைக்கும்.

தமிழகத்தில் ஜனநாயகம் இறந்து விட்டது. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடையாது. எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் கோவை சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி, அம்மன் அர்சுணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...