திருப்பூரில் கடனுக்கான சக தொழிலாளியின் குழந்தை கடத்தல் - தம்பதி கைது!

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தூய்மை பணியாளரான டென்னி, தன்னுடன் பணிபுரியும் வேலுவிடம் ரூ.2 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார். இதனை திருப்பி கொடுக்காததால், டென்னியின் 2 வயது ஆண் குழந்தையை கடத்திச் சென்று திருப்பூர் ரயில் நிலையத்தில் வேலு, தனது மனைவி வள்ளியுடன் கைது செய்யப்பட்டார்.



திருப்பூர்: 2 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பி கொடுக்காத ஆத்திரத்தில் ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பூருக்கு 2 வயது குழந்தையை கடத்தி வந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

அதன்பேரில், போலீசார் ரயில் நிலையத்துக்கு விரைந்து வந்து குழந்தையுடன் இருந்த தம்பதியை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலைய நடைமேடையில் தங்கி தூய்மைப் பணியை மேற்கொள்ளும் வேலு (வயது 32), அவரது மனைவி வள்ளி (28) என்பதும், அவர்கள் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 2 வயது ஆண் குழந்தையை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

கடத்திவரப்பட்ட குழந்தை, ஜோலார்பேட்டை ரயில் நிலைய நடைமேடை பகுதியில் தங்கி தூய்மைப்பணி மேற்கொள்ளும் டென்னி (வயது32) என்பவரது குழந்தை ஆகும். டென்னி, வேலுவிடம் ரூ.2 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திருப்பிக்கொடுக்காமல் இருந்துள்ளார்.

இதனால், கடந்த 10-ந் தேதி இரவு ஜோலார்பேட்டையில் தூங்கிக் கொண்டிருந்த டென்னியின் குழந்தையை தூக்கிக்கொண்டு வேலுவும், வள்ளியும் ரயில் மூலமாக திருப்பூருக்கு வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

பின்னர், திருப்பூர் வடக்கு போலீசார் இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு டென்னி தனது குழந்தையை காணவில்லை என்று ஏற்கனவே போலீசில் புகார் கூறியிருந்தார்.

ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் டென்னியுடன் திருப்பூர் வந்து குழந்தையை மீட்டனர். ரூ.2 ஆயிரம் கடனுக்காக குழந்தையை கடத்தி வந்த வேலு, வள்ளி ஆகிய 2 பேரையும் ஜோலார்பேட்டைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

Newsletter

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...

சூலூர் தொகுதி: AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி வேட்பு மனு தாக்கல்

சூலூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவை தா...

தொண்டாமுத்தூரில் AIADMK வேலுமணி வேட்புமனு: அண்ணாமலை உடன் தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் S.P. வேலுமணி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். BJP முன்னாள் மாந...

தொண்டாமுத்தூர்: N.R. கார்த்திகேயன் வேட்புமனு தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் N.R. கார்த்திகேயன், பேரூர் தாலுக்கா அலுவலகத்தில் வேட...

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...