பொள்ளாச்சி அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து

பொள்ளாச்சி அருகே உள்ள ராசக்காபாளையத்தில் தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதால், ஒரு மணி நேரத்துக்கு மேலாக தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அனைத்து வருகின்றனர். இந்த விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தென்னை நார் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.



கோவை: பொள்ளாச்சி அருகே தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.



கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ராசக்காபாளையத்தில் மோகன ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் தென்னை நார் உற்பத்தி செய்யப்பட்டு உரிய விலை கிடைக்காததால் டன் கணக்கில் தேக்கி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று உற்பத்தி செய்யப்பட்ட தென்னை நாரை உலர வைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.



அப்போது திடீரென குவிக்க வைக்கப்பட்டிருந்த தென்னை நாரின் ஒரு பகுதியில் இருந்து புகை வந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் புகையை கட்டுப்படுத்த செல்வதற்குள், தீயாக பரவி மளமளவெனப் பற்றி எரியத் தொடங்கியது.



இதில் டிராக்டர், தென்னை உற்பத்தி செய்யக் கூடிய இயந்திரம் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்தது.



பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த தீ விபத்தில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான தென்னை நார் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...