கோவையில் பயணிகள் ஏறி இறங்க டவுன் பேருந்துகளில் நிறுத்தங்களை அறிவிக்கும் ஆடியோ கருவி!

கோவையில் இயக்கப்பட்டு வரும் டவுன் பேருந்துகளில் நடத்துனர்களின் வேலைப்பளுவை குறைக்கும் விதமாகவும், பயணிகளின் வசதிக்காகவும் சோதனை முயற்சிக்காக நிறுத்தங்களை அறிவிக்கும் ஆடியோ கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் இயக்கப்பட்டு வரும் டவுன் பேருந்துகளில் சோதனை முயற்சிக்காக நிறுத்தங்களை அறிவிக்கும் ஆடியோ கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

கோவையில் 675 டவுன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பேருந்துகள் தாழ்தள சொகுசு பேருந்துகளாகும்.

இந்த பேருந்துகளில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் அதிகளவில் பயணம் செய்து வருகின்றனர். வழக்கமாக பேருந்துகளில் பயணிகள் ஏறவும், பயணிகள் பேருந்தை விட்டு இறங்கும் பொழுதும் நடத்துனர்கள் விசில் ஊதுவார்கள்.



நடத்துனர் விசில் ஊதியவுடன் பேருந்தை ஓட்டுனர் நிறுத்தி விடுவார். அதன் பின்னர் பயணிகள் இறங்குவதும், ஏறுவதும் வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காவும், நடத்துனர்களின் வேலைப்பளுவை குறைக்கவும், டவுன் பேருந்துகளில் தானியங்கி அறிவிப்பு ஆடியோ கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



இந்த தானியங்கி அறிவிப்பு ஆடியோ கருவி கோவையில் இயங்கும் டவுன் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி பேருந்து நிறுத்தம் நெருங்கும் போது, பேருந்து நிறுத்தத்தின் பெயரை அறிவிக்கிறது.



பேருந்து புறப்பட்டவுடன், அடுத்து வரும் பேருந்து நிறுத்தத்தின் பெயரை அறிவித்து இறங்கும் பயணிகளை தயார்படுத்துகிறது. இதனால் நடத்துனரின் விசிலுக்கு வேலை இல்லை.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் முக்கிய நகரங்களில் ஓடும் டவுன் பேருந்துகளில் இந்த ஆடியோ அறிவிப்பு கருவி பொருத்தப்பட்டு உள்ளது. கோவையில் 35 டவுன் பேருந்துகளில் சோதனை முறையில் பொருத்தி இருக்கிறோம். பயணிகளுக்கு இந்த கருவி எந்தளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு மேலும் அதிகரிக்கப்படும், என்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...