ஏப்.9ம் தேதி முதுமலை வருகிறார் பிரதமர் மோடி - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வரும் 9ம் தேதி பிரதமர் நரேந்திர வருவதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, தெப்பக்காடு முகாமை சீரமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.



நீலகிரி: புலிகள் பாதுகாப்பு திட்டம்தொடங்கி 50-வது ஆண்டு ஆவதை கொண்டாடும் விதமாக வருகின்ற 9-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்குச் சென்று பார்வையிடுகிறார்.



அதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கும் வருகிறார். 9-ந்தேதி காலை 9.35 மணிக்கு வரும் அவர், வளர்ப்பு யானைகள் முகாமை பார்வையிடுகிறார்.

பின்னர் ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் யானைகள் குறித்த ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியை நேரில் சந்திப்பதுடன், ரகு மற்றும் பொம்மி யானைகளையும் பார்க்கிறார்.

யானை பகன்கள் மற்றும் பழங்குடியின வனத்துறை ஊழியர்களிடம் பேசும் மோடி, பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மசினகுடி பகுதிக்கு சென்று ஹெலிகாப்டர் மூலமாக மீண்டும் மைசூர் செல்ல உள்ளார்.

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு பிரதமர் வரவுள்ளதையொட்டி, தெப்பக்காடு பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முதல் 9ம் தேதி வரை முதுமலையில் உள்ள அனைத்து ஓய்வு விடுதிகள், துயிலகங்கள், உணவகம், சிற்றுண்டியகம் மூடப்படும் எனவும், வனவிலங்குகளை காண்பதற்கான வாகன சவாரியும் நாளை முதல் 9ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதமர் வருகையை முன்னிட்டு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதோடு, அப்பகுதியில் டுரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 8-ந்தேதி மாலை 4 மணி முதல் 9-ந்தேதி காலை 10.30 மணி வரை தொரப்பள்ளி - கக்கநல்லா - பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலை மூடபடுகிறது.



இதனிடையே தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமை சீரமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...