காசி தமிழ் சங்கத்திற்கு சென்ற கோவை பெண்ணுக்கு பிரதமர் கடிதம்!

தமிழகத்திலிருந்து காசி தமிழ் சங்கத்திற்கு சென்று வந்த கோவையை சேர்ந்த துளசி அம்மாள் என்ற பெண்ணுக்கு நாட்டின் பன்முகத்தை காக்க இத்தகைய ஒற்றுமை உணர்வு ஊக்குவிக்கிறது என பாரத பிரதமர் நரேந்திர மோடி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.



கோவை: காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி கடந்த நவம்பர் 16ஆம் தேதி காசியில் நடைபெற்றது. இதற்காக தமிழகத்தின் 12 இடங்களிலிருந்து காசிக்கு சிறப்பு ரயில்கள் மூலம் சுமார் 2,500 பேர் ஆன்லைனில் பதிவு செய்து சென்றிருந்தனர்.

பின்னர் தமிழ் சங்கம் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய அனைவரும் இந்த தமிழ் சங்கம் நடைபெற்றது குறித்த நிகழ்வுகளை கடிதமாக பாரத பிரதமர் மோடிக்கு எழுதி இருந்தனர்.



இந்நிலையில் சூலூர் முத்துகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த துளசி அம்மாள் மற்றும் ராஜாமணி ஆகியோர் காசி தமிழ் சங்க நிகழ்வுக்கு சென்றிருந்தனர். அவர்களும் பிரதமர் மோடிக்கு காசி தமிழ் சங்க நிகழ்வு குறித்து கடிதம் எழுதி இருந்தனர். இதற்கு பதில் அனுப்பும் விதமாக பிரதமர் மோடி, தமிழில் பதில் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், இந்தியா ஒரு பன்முக தன்மை கொண்ட நாடு. ஒவ்வொருவரின் உணர்வாக இருக்கக்கூடியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கலாச்சாரத்தை ஒன்றிணைப்பது மத்திய அரசின் நோக்கம். காசி தமிழ் சங்கத்துக்கு கொடுக்கப்பட்ட அன்பும், அரவணைப்பும் மதிக்கக் கூடியது. நாட்டின் ஒற்றுமையை ஒன்றிணைப்பது இது போன்ற முயற்சிகள் மூலம் இரட்டிப்பாகும் என கடிதம் எழுதியுள்ளார்.



இந்த கடிதத்தை பெற்ற துளசி அம்மாள் மனமகிழ்ச்சி அடைந்துள்ளார்.



பின்னர் இது தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இதுகுறித்து பேசிய துளசி அம்மாள், காசி தமிழ் சங்க நிகழ்வுக்கு சென்றது மகா மன மகிழ்ச்சி தருவதாகவும், காசி தமிழ் சங்கத்திற்கு சென்றபோது அங்குள்ள கோவில்கள், ராமர் ஆலயம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் சென்று தரிசித்தது மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் அங்குள்ள மக்கள் தமிழர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமிழர்களையும், தமிழரையும் வளர்க்க உதவும். பிரதமர் மோடிக்கு காசி தமிழ் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் குறித்த கடிதத்தை அனுப்பி இருந்தோம். அதற்கு பதில் அனுப்பும் விதமாக, பிரதமர் மோடி பதில் கடிதம் அனுப்பி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...