கோவையில் வீர மாஸ்தி அம்மன் கோவில் திருவிழா கொண்டாட்டம்

கோவை கெம்பனூர் அண்ணா நகரில் வீரமாஸ்தியம்மன் கோவிலில் கடந்த 28ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில் இன்று மாவிளக்கு பூஜை, முளைப்பாரி, அம்மனுக்கு சீர் தட்டுகள் கொண்டுவருதல் நிகழ்ச்சி நடக்கிறது.


கோவை: தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் அண்ணா நகரில் வீரமாஸ்தியம்மன் கோவிலில் திருவிழாவில் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் அண்ணா நகரில் வீரமாஸ்தியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 28ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து முகூர்த்தங்கால் நடுதல், காப்பு கட்டுதல், அக்னி கம்பம் நடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நேற்று சக்தி கரகம், அக்னி சட்டி ஊர்வலம், அம்மனை ஆற்றிலிருந்து அழைத்துவரும் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சக்தி கரம் எடுத்தும், அக்னி சட்டி எடுத்து வந்தும் அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

இன்று மாவிளக்கு பூஜை முளைப்பாரி, அம்மனுக்கு சீர் தட்டுகள் கொண்டுவருதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து நாளை அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்க உள்ளது. தொடர்ந்து 108 திருவிளக்கு வழிபாடும் நடைபெற உள்ளது. விழாவின் இறுதியாக அக்னி கம்பம் ஆற்றுக்கு எடுத்து செல்லுதல், மறுபூஜை, மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

இந்த திருவிழா கோவை ஆதீனம் ஸ்ரீலாஸ்ரீ பாலமுருகனடிமை சுவாமிகள் அருளாசியுடன் நடைப்பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கெம்பனூர் அண்ணா நகர் ஊர்பொதுமக்கள், விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...