மேட்டுப்பாளையம் மைதான மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா - நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

மேட்டுப்பாளையம் - ஊட்டி செல்லும் சாலையில் உள்ள மைதான மாரியம்மன் கோவிலில் 92ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திகடன் செலுத்தினர்.


கோவை: மேட்டுப்பாளையம் மைதான மாரியம்மன் கோவில் குண்டம் இறங்குநல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோவை மேட்டுப்பாளையம் - ஊட்டி செல்லும் சாலையில் மிகவும் பிரசித்தி பெற்ற மைதான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 92ஆம் ஆண்டு திருவிழா கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து 31ஆம் தேதி சுப்பிரமணியசாமி கோவிலில் இருந்து பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும், நேற்று காலை குண்டம் திறத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு தினந்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகளும், அபிஷேக அலங்காரங்களும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. தலைமை பூசாரி மோகன்குமார் தலையில் கரகம் எடுத்து பூப்பந்தினை உருட்டி விட்டு குண்டம் இறங்கி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் லோகநாதன், கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாணசுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆர்.சண்முகசுந்தரம், அஷ்ரப் அலி, தி.மு.க. காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம்,

மேட் டுப்பாளையம் நகராட்சி ஆணையர் வினோத், வட்டாட்சியர் மாலதி, நகர் மன்ற உறுப்பினர்கள் விஜய காண்டீபன், உமா மகேஸ்வரி, தனசேகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், திருக்கோவில் கமிட்டியினர் உட்பட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பக்தர்களின் பாதுகாப்பிற்காக மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...