கோவையில் புதிய பேருந்து நிழற்குடை அமைக்கும் பணி தொடக்கம் - எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பங்கேற்பு

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாய்பாபா காலனி பகுதியில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 12.82 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜையை அத்தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை அருகில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 12.82 இலட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிழற்குடைக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தார்.



அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,



கோவையில் குடிநீர் பிரச்சனை என்பது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார், ஒரு சில இடங்களில் 15 நாட்களுக்கு ஒருமுறை 30 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வருவதாகக் கூறினார்.

மேலும், சிறுவாணியில் நீர் குறைவாக இருந்தால் லாரிகள் மூலமாவது மக்களுக்கு குடிநீர் வழங்குவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். கோடைக்காலம் துவங்கும் முன்பே குடிநீர் பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் அண்ணா மார்க்கெட் பகுதியில் சுமை தூக்கும் பணியாளர்களுக்கு தகுந்த ஏற்பாடு செய்து தர வேண்டும். கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், மத்திய அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது. மாநில அரசும் பொதுமக்களுக்கு தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளை அதிமுக அரசு ஏற்கனவே வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள நிலையில், அப்பகுதியில் நிலக்கரி சுரங்கள் அமைப்பது குறித்து மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார். இதில் எந்த ஒரு குழப்பமும் இல்லை. கலாச்சேத்ரா விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தான் முதலில் வந்தது. பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன்வர வேண்டும்.பல்வேறு இடங்களில் விசாகா கமிட்டி அமைக்கப்படாமல் உள்ளது. மாநில அரசு அனைத்து இடங்களிலும் விசாகா கமிட்டி உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ராகுல் காந்தி விவகாரத்தில் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கி உள்ளதாகவும் இதற்கும் பாஜகவுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. சட்டம் அதன் கடமையை செய்து வருகிறது. இதற்கு பாஜக மீது பாய்வது என்பது முறையானது அல்ல. தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அரசு நிலக்கரி மற்றும் எரிபொருள் எடுப்பதற்கு அனுமதி வழங்குமாயின் அதிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து மாநில அரசுதான் மத்திய அரசுடன் இணைந்து பேச வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...