கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.110.90 கோடி மதிப்பில் பன்னடுக்கு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பல்வேறு சிகிச்சை பிரிவுகளையும் ஆய்வு செய்தார்.


கோவை: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு மேற்கொண்டார்.



கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பன்னடுக்கு மருத்துவமனை கட்டிட பணிகள் ஜப்பான் பன்னாட்டு நிதியுதவியுடன் ரூ.110.90 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.

இதில் 250 படுக்கை வசதி, 12 அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் நவீன ஆய்வகங்கள் அமையவுள்ளது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

மேலும், மழை பெய்யும் போது மருத்துவமனை நுழைவாயிலில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பல்வேறு சிகிச்சை பிரிவுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர், மருத்துவக்கல்லூரி மாணவியர்கள் தங்கும் விடுதி மற்றும் கல்லூரியின் பின்புறம் உள்ள பகுதிகளில் சுற்றுச்சுவர் அமைப்பது தொடர்பாகவும், மருத்துவமனை முதல்வரிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன் உட்பட மருத்துவர்கள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...