கோவையில் கல்லூரி மாணவருக்கு பாலியல் தொல்லை - பேராசிரியர் பணியிடை நீக்கம்!

கோவை தனியார் கலை அறிவியல் கல்லூரியின் டீன் மற்றும் உயிர்வேதியல் துறை தலைவராக இருந்து வருபவர், முனைவர் பட்டம் படிக்கும் மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்ததால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.



கோவை: மாணவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த, கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியின் டீன் மற்றும் உயிர்வேதியல் துறை தலைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.



கோவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியின் டீன் மற்றும் உயிர்வேதியல் துறை தலைவராக இருந்து வருபவர் மதன்சங்கர். இவரிடம் முனைவர் பட்டம் படிக்கும் மாணவர் ஒருவர், மதன்சங்கர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக பாரதியார் பல்கலை கழகம் மற்றும் கல்லூரி நிர்வாகம் ஆகியவற்றில் புகார் அளித்தார்.

இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள ஐ.சி.சி கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து இருப்பது உறுதியானது.



இதைதொடர்ந்து கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் டீன் மற்றும் உயிர்வேதியல் துறை தலைவரான மதன்சங்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஐசிசி கமிட்டி விசாரணை அறிக்கையும், பாதிக்கப்பட்ட மாணவருக்கும், கல்லூரி டீனும் இடையே நடைபெற்ற ஆடியோவும் வெளியாகியது. இதில் மாணவரை, பேராசிரியர் மதன்சங்கர் சமரசபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவது பதிவாகி இருந்தது.

விசாரணை அறிக்கையில், மாணவரை இந்தோனேசியா, சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று கல்லூரி டீன் மதன்சங்கர் பாலியல் தொந்தரவு செய்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் ஐ.சி.சி கமிட்டி விசாரணை நடத்திய பின்பும் கல்லூரி டீன் மதன்சங்கர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்தார். கடந்த ஓன்றரை ஆண்டு காலமாக மதன்சங்கர் பாலியல் ரீதியாக அத்துமீறினார் எனவும், மதரீதியாக, ஜாதி ரீதியாகவும் பேசும் வழக்கம் கொண்டவர் எனவும், அவர் சொல்லும்படி கேட்காமலிருந்தால் கையெழுத்து போட மாட்டார் எனவும் பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்தார்.

ஐ.சி.சி கமிட்டி விசாரணை நடத்தி முடித்து இருக்கும் நிலையில், டீன் மதன்சங்கர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், அவர் ஆசிரியர் பணியில் இருக்க கூடாது, பிற மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது எனவும் மாணவர் குற்றம்சாட்டினார்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...