ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு - வர்க்கி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தயாரிக்கப்படும் திண்பண்டங்களில் ஒன்றான ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும், தமிழகத்தின் பாரம்பரியமான உணவுப் பொருட்களான மணப்பாறை முறுக்கு ஆகியவற்றுடன் மானாமதுரை கடம், மயிலாடி கல்சிற்பங்கள் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.


நீலகிரி: தமிழகத்தின் பாரம்பரியமான உணவுப் பொருட்களான ஊட்டி வர்க்கி, மணப்பாறை முறுக்கு ஆகியவற்றுடன் மானாமதுரை கடம், மயிலாடி கல்சிற்பங்கள் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. பல கட்ட ஆய்வுக்குப் பின், கடந்த நவ.,30 புவிசார் குறியீடு இதழில், ஊட்டி வர்க்கிக்கு, புவிசார் குறியீடுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிக்கை வெளியானதிலிருந்து, நான்கு மாதங்களுக்குள் அதாவது மார்ச் 30க்குள் இதற்கு ஆட்சபேம் எழுந்தால், அந்த விண்ணப்பம் மறுபரிசீலனைக்கு உள்ளாகும். இல்லாவிடில், அந்தப் பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு விடும். அந்த வகையில், வரும் மார்ச் 31 லிருந்து, ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு என்கிற மகத்தான அங்கீகாரம் கிடைக்கவுள்ளது.

புவிசார் குறியீடு, ஊட்டி வர்க்கிக்குக் கிடைப்பது, ஊட்டியின் பாரம்பரியத்துக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் ஊட்டியைத் தவிர, வேறு எங்கு தயாரிக்கப்படும் வர்க்கியையும் ஊட்டி வர்க்கி என்ற பெயரில் விற்பனை செய்வதை, சட்டப்பூர்வமாகத் தடுக்க முடியும்.

இதற்காக பெருமுயற்சி எடுத்த வர்க்கி உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் முகம்மது பரூக் கூறுகையில், ''ஊட்டி வர்க்கிக்குக் கிடைக்கும் இந்த அங்கீகாரம், பெருமகிழ்ச்சியைத் தருகிறது. இதைத் தரமாகத் தயாரிக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வை இந்த அங்கீகாரம் கொடுத்துள்ளது. ஏற்கனவே, குறியீடு பெற்றுள்ள ஊட்டி டீயுடன் வர்க்கியும் சேர்வது, இணையற்ற சுவையாக அமையவுள்ளது,'' என்றார்.

மொறுமொறு மணப்பாறை முறுக்கு, ஊட்டி வர்க்கியுடன் சேர்த்து, அதே நாளில் மணப்பாறை முறுக்குக்கும் புவிசார் குறியீடு கிடைக்கவுள்ளது. இது, தமிழகத்தின் பாரம்பரிய உணவுப் பொருளுக்கான பெருமையை உலகறியச் செய்யும்.

இவற்றுடன் மண் பாண்டத்துக்குப் பெயர்பெற்ற மானாமதுரையில் தயாரிக்கப்படும் இசைக்கருவியான கடம், குமரி மாவட்டத்தில் தயாராகும் கைவினைப் பொருளாகிய மயிலாடி கல் சிற்பங்கள் ஆகியவற்றுக்கும் அதே நாளில் புவிசார் குறியீடு என்ற பெருமை கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...