கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 43 மனுக்கள் வழங்கல்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் 43 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள்‌ அளித்தனர்‌. மனுவை பெற்றுக்கொண்ட மேயர் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம் நடைபெற்றது. கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ இன்று நடைபெற்றது.



இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌, துணை மேயர்‌ வெற்றிசெல்வன்‌, துணை ஆணையாளர்‌ ஷாமிளா ஆகியோர்‌ முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில்‌ மேயரிடம்‌ மாநகராட்சியின்‌ அனைத்து பகுதிகளைச்‌ சோந்த பொதுமக்கள்‌ பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்‌, சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர்‌ மாற்றம்‌, மருத்துவம்‌, சுகாதாரம்‌, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ குறித்த பல்வேறு கோரிக்கைகள்‌ அடங்கிய 43 மனுக்கள்‌ பெறப்பட்டன.



இவற்றில்‌ கிழக்கு மண்டலத்தில்‌ 11மனுக்களும்‌, மேற்கு மண்டலத்தில்‌ 7 மனுக்களும்‌, வடக்கு மண்டலத்தில்‌ 5 மனுக்களும்‌, தெற்கு மண்டலத்தில்‌ 4 மனுக்களும்‌, மத்திய மண்டலத்தில்‌ 12 மனுக்களும்‌, பிரதான அலுவலகத்தில்‌ 4 மனுக்களும்‌ ஆக மொத்தம்‌ 43 மனுக்களை பொதுமக்கள்‌ அளித்தனர்‌.

இக்கோரிக்கை மனுக்களைப்‌ பெற்றுக்கொண்ட மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, இம்மனுக்களின்‌ மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள்‌, பொறியாளர்கள்‌ மற்றும்‌ அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில்‌, மண்டல உதவி ஆணையார்கள்‌ அண்ணாதுரை, மகேஷ்கனகராஜ்‌, மோகன சுந்தரி, சேகர், உதவி ஆணையாளர்(வருவாய்‌) செந்தில்குமார்‌ ரத்தினம்‌, உதவி ஆணையர்‌ (கணக்கு) சுந்தாராஜ்‌, நகரமைப்பு அலுவலர்‌ கருப்பாத்தாள்‌, உதவி செயற்பொறியாளர்கள்‌, உதவி நகரமைப்பு அலுவலாகள்‌, உதவி பொறியாளர்கள்‌, மாநகராட்சி அனைத்து அலுவலர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டார்கள்‌.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...