காட்டுயானை உயிரிழப்புக்கு வெடி விபத்தே காரணம் - பொள்ளாச்சியில் நடந்த உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தகவல்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வனத்துறையினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த வாயில் காயமடைந்த பெண் யானையின் உயிரிழப்புக்கு காரணம் வெடி விபத்து என உடற்கூறு ஆய்வுவில் தெரியவந்துள்ளதாக மருத்துவ குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட வெள்ளியங்காடு பகுதியில் கடந்த 14.ஆம் தேதி ஒரு பெண் காட்டு யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலத்துக்குள் புகுந்து சோர்வுற்ற நிலையில் சுற்றி வந்தது.

இதை அடுத்து, அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறையினர் யானையை கண்காணித்தபோது, யானையின் நாக்கு மற்றும் வாய்ப்பகுதியில் காயங்கள் இருந்ததும் உடல் மெலிந்த நிலையில் மிகுந்த சோர்வுற்ற நிலையில் இருந்ததையும் கண்டு உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.



தொடர்ந்து யானையை கண்காணித்து வந்த வனத்துறையினர், யானை உணவு உட்கொள்ள முடியாமல் மிகுந்த வலியுடன் இருப்பதை அறிந்த ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனரும் கோவை மண்டல தலைமை வன பாதுகாவலமான ராமசுப்பிரமணியம், யானையை தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளிக்க வசதியாக பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் வனபகுதிக்கு கொண்டு செல்ல திட்டமிட்டார்.

இந்நிலையில் கடந்த 17.ம் தேதி மயக்க ஊசி செலுத்தி கும்கி யானை சின்னத்தம்பி உதவியுடன் யானையை லாரியின் மூலம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள உலாந்தி வனச்சரகத்திற்குட்பட்ட அடர்ந்த வனப் பகுதியான டாப்சிலிப் வரகளியாரு பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.



அங்கு கும்கி யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் கிரால் எனப்படும் மிகப்பெரிய மரக்கூண்டில் யானையை அடைக்கப்பட்டு வாய் மற்றும் நாக்கு பகுதியில் காயங்களுடன் தவித்து வந்த யானைக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு யானைக்கு நீர்ச்சத்தை அதிகப்படுத்த குளுக்கோஸ் போடப்பட்டு யானையின் உடல்நிலை குறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்.



இந்நிலையில், நேற்றுமுன்தினம் இந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதையடுத்து, நேற்று யானைக்கு வன கால்நடை மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர். அதில், யானை வெடி மருந்து உட்கொண்டதன் காரணமாக விபத்து ஏற்பட்டு நாக்கு தாடை மற்றும் பற்கள் காயமடைந்ததாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையை வனத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். மேலும், யானை உயிரிழப்பு தொடர்பாக காரமடை வனச்சரக வனத்துறையினர் சார்பில் வழக்கு பதிவு செய்து, உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என கோவை மண்டல தலைமை வன பாதுகாவலருமான ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்கருமான ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...

கிணத்துக்கடவு இளைஞர் கொலை வழக்கில் கைதான மாதேஷ் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை...

Kinathukadavu Murder Accused Detained Under Goondas Act

Mathesh, 21, who was arrested in connection with the murder of a 22-year-old man in Kinathukadavu, Coimbatore district,...

Coimbatore Police Constable M. Vijay Wins Gold at State-Level Anti-Sabotage Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS) won the gold medal in t...