தனியார் கல்குவாரிகளை விரைவில் மூட வேண்டும்..! - சமூக செயற்பாட்டாளர் முகிலன் வலியுறுத்தல்

பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் அமைய உள்ள தனியார் கல்குவாரிகள் குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துகளை தெரிவித்த பொதுமக்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அரசுக்கு சமூக செயற்பாட்டாளர் முகிலன் கோரிக்கை விடுத்துள்ளார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கோடங்கிபாளையம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வந்தனர். பல்லடம் வட்டாட்சியர் ஜெய் சிங் சிவக்குமாரை சந்தித்து அவர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.



இவர்களுடன் வந்த சமூக செயற்பாட்டாளர் முகிலன் பேசியதாவது,

வருகின்ற மார்ச் 16ஆம் தேதி இச்சிப்பட்டியில் பாலமுருகன் கல்குவாரி இயங்குவதற்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த குவாரியை ஒட்டி பிஏபி வாய்க்கால் அமைந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இந்த பிஏபி வாய்க்காலில் இருந்து 25 மீட்டர் தொலைவில் குவாரி அமைக்க இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால், சிறு கனிம தணிக்கை சட்டம் 1959யில் 50 மீட்டர் தொலைவிற்கு குளம் குட்டை நீர்நிலைகள் ஏதும் இருக்கக் கூடாது என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

அரசு விதிமுறைகளை மீறி இந்த கல்குவாரி அமைய உள்ளது. இதேபோல், கடந்த பத்தாம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோடங்கிபாளையத்தில் புதிதாக அமைய உள்ள ஐந்து புதிய கல் குவாரிகளுக்கான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் அடியாட்கள் எங்களது கருத்துக்களை சட்ட விதிகளின்படி பேச விடாமல் ரகளை செய்ததன் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கருதி மாவட்ட ஆட்சியரே அந்த கருத்து கேட்க கூட்டத்தை ரத்து செய்து விட்டார்.

இந்த நாட்டில் கடைசி குடிமகன்கூட தனது கருத்தை சுதந்திரமாக வெளிப்படையாக சொல்ல வேண்டும். அதற்கு அரசு இதுபோன்ற கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும். அதற்குரிய பாதுகாப்பையும் வழங்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் கடந்தாண்டு மட்டும் மூன்று முறை நில அதிர்வு ஏற்பட்டு பூமியின் நிலத்தட்டுக்கள் விலகிக் கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் காலநிலை மாற்றம் குறித்து சிறப்பு குழு அமைத்து செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

இந்தப் பகுதிகளில் புதிதாக கல்குவாரிகள் அமைப்பதற்கு பதிலாக எம்சாண்ட், மாற்று மணலுக்கு மாற்றாக வெளிநாட்டில் இருந்து ஆற்று மணலை இறக்குமதி செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...