விளாங்குறிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் பயன்பாட்டுக்கு வருமா? - மக்கள் காத்திருப்பு

கோவை விளாங்குறிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து 6 மாதங்களாகியும், டாக்டரோ, செவிலியர்களோ நியமிக்கப்படவில்லை. இதனால் சமூக விரோதிகளின் கூடரமாக மாறி வரும் நிலையில், ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: விளாங்குறிச்சியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வருமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கோவை பீளமேடு விளாங்குறிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக கட்டப்பட்டு வந்தது. இந்த பணி முடிந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திறந்து வைக்கப்பட்டது.

திறக்கப்பட்டு 6 மாதங்களை கடந்தும் இன்று வரை இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டாக்டரோ, செவிலியர்களோ நியமிக்கப்படவில்லை. மேலும் சுற்றுச்சுவர்களும் இல்லாமல் கிடப்பதால், அருகே உள்ள டாஸ்மாக் கடைக்குவருபவர்கள் மதுவை வாங்கி வந்து அமர்ந்து மது குடிக்கும் நிலை காணப்படுகிறது.

எனவே இந்த பகுதியில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...