கோவை ஈசா யோகா மையத்தில் ஆதியோகி சிலை திறப்பு விழாவிற்கு தடைவிதிக்க கோரிக்கை.


கோவை ஈசா யோகா மையத்தில் மலை தள பாதுகாப்பு துறை அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலை திறப்பு விழாவிற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் சிலை திறப்பு விழாவிற்கு வரும் பிரதமர் நரேந்திரமோடிக்கு கருப்பு கொடிகாட்டப்போவதாக சமூக நீதிக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈசா யோகா மையமானது அமைந்துள்ளது. இங்கு 112 அடி உயரத்தில் பிரமாண்டமாக ஆதியோகி சிலையானது அமைக்கப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி சிலையை திறந்து வைக்கின்றார். இந்நிலையில் ஈசா யோகா மையமானது மலைதள பாதுகாப்பு துறையிடம் சிலை அமைக்க அனுமதி பெறவில்லை எனவும் அனுமதி இன்றி அமைக்கப்பட்ட சிலை திறப்பு விழாவிற்கு அனுமதி வழங்க கூடாது எனவும் கூறி கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரனிடன் சமூக நீதிக்கட்சியினர் இன்று மனு அளித்தனர். மேலும் அனுமதி பெறாத சிலையை திறக்க இந்திய பிரதமர் மோடி வந்தால் அவருக்கு கருப்பு கொடிகாட்டப்போவதாகவும் சமூக நீதிக்கட்சியினர் தெரிவித்தனர்.

மேலும் அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள  ஆதியோகி சிலை திறப்பு தொடர்பாக ஈசா மையம் வைத்துள்ளா விளம்பரங்களை அகற்ற வேண்டும் எனவும் சமூக நீதிக்கட்சியினர் தெரிவித்தனர். மேலும் கோவையில் அனைத்து துறைகளிலும் அனுமதி பெற்ற நிலையில் அம்பேத்கர் சிலையை அமைக்க அனுமதிக்காத மாவட்ட நிர்வாகம், மலைதள பாதுகாப்பு துறையில் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலையை திறக்க அனுமதித்துள்ளதாகவும் சமூக நீதிக்கட்சியினர் குற்றம்சாட்டினர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...