ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரை சாப்பிட மாணவிகளில் ஒருவர் உயிரிழப்பு!

ஊட்டியில் உருது நடுநிலைப்பள்ளியில் அதிகளவு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவிகளில் ஒருவர் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு சென்னைக்கு சிக்கிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பெண் ஆசிரியை ஒருவர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



நீலகிரி: ஊட்டி அரசு பள்ளியில் அதிக சத்து மாத்திரைகள் உண்டு சிகிச்சையில் இருந்த 13 வயது சிறுமி உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள காந்தல் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 249 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு, தமிழக அரசின் சுகாதாரத்துறை மூலம் ஊட்டச்சத்து மாத்திரைகள், கடந்த 6ம் தேதி வழங்கப்பட்டது.

அப்போது 8ம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடையே யார் அதிகளவிலான ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிடுகிறார்கள் என்ற விபரீத விளையாட்டு எண்ணம் உருவானது. தொடர்ந்து ஒவ்வொரு மாணவியும் தன்னால்தான் முடியும் என்றுக்கூறி சாக்லேட் சாப்பிடுவதுபோல் அதிகளவில் மாத்திரைகளை போட்டிப் போட்டு சாப்பிட்டனர்.

இதனால் வகுப்பறையில் 4 மாணவிகள் மயக்கம் வருவதாக கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த சகமாணவிகள், ஆசிரியர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து என்ன நடந்தது என்று கேட்டு மாணவிகளை ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் 13 வயது சிறுமி மட்டும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்ததால் அவரை மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது சேலம் அருகே சென்ற போது சிறுமிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுமி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ஏனைய சிறுமிகளுக்கு கோவை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பெண் ஆசிரியை ஒருவர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...