கோவை அருகே காட்டுயானை தாக்கி பெண் படுகாயம் - அச்சத்தில் மக்கள்!

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சோமையனூர் பகுதியை சேர்ந்த பாலாமணி, வீட்டின் அருகில் யானை நின்றதை பார்த்து குழந்தைகளுடன் ஓட முயன்றுள்ளார். அப்போது பாலாமணியை யானை தாக்கி காயமடைந்தார். குழந்தைகள் இருவரும் எவ்வித காயங்களுமின்றித் தப்பினர்.


கோவை: கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், சோமையனூர், மாங்கரை ஆகிய பகுதிகளில் காட்டுயானைகள் உள்ளன. தற்போது கோடைக்காலம் துவங்கியதால் காட்டுயானைகள் தண்ணீருக்காக அடிக்கடி ஊருக்குள் வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை சோமையனூர் பகுதியில் வசித்துவரும் பாலாமணி என்ற பெண், யானை பிளிறும் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தபோது வீட்டிற்கு வெளியில் காட்டுயானை ஒன்று நின்றுக் கொண்டிருந்துள்ளது. இதனால், அச்சமடைந்த பாலாமணி அவரது இரு குழந்தைகளை தூக்கிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி ஓட முயன்றுள்ளார்.

அப்போது யானை பாலாமணியை தாக்கிவிட்டு சென்றுள்ளது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அவரும் குழந்தைகளும் சத்தமிடவே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பாலாமணிக்கு யானை தாக்கி கீழே விழுந்ததில் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டு தற்பொழுது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். குழந்தைகள் இருவரும் எவ்வித காயங்களுமின்றித் தப்பினர்.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் யானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் என்பதால் வனத்துறையினர் இரவு நேரத்தில் கண்காணிப்பு பணிகளை துரிதப்படுத்தி யானை குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...