சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் பொங்கலூர் சுங்கச்சாவடியை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செயல்படாமல் உள்ள பொங்கலூர் சுங்கச்சாவடி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாகவும், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் அதனை உடனடியாக அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் சுங்கச்சாவடி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவையில் இருந்து பல்லடம் வழியாக திருச்சி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை NH81ல் கடந்த 2006ஆம் ஆண்டு பல்லடத்தை அடுத்த பொங்கலூர் அருகே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது.

பல்லடம் மற்றும் பொங்கலூர் பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் உள்ளதால் பொங்கலூரில் சுங்கச்சாவடி அமைந்தால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் எனக்கூறி பொதுமக்களின் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக திறப்பு விழா காண்பதற்கு முன்னதாகவே பொங்கலூர் சுங்கச்சாவடியை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.



2006 ஆம் ஆண்டு மூடுவிழா கண்ட சுங்கச்சாவடி தற்பொழுது வரை அகற்றப்படாமலேயே உள்ளது. சாலையின் நடுவே செயல்படாமல் உள்ள இந்த சுங்கச்சாவடியால் இரவு நேரங்களில் விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

மேலும், லாரி ஓட்டுனர்கள் வாகனத்தை இங்கு நிறுத்திவிட்டு மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் செயல்படாமல் உள்ள இந்த சுங்கச்சாவடியில் வைக்கப்பட்டு இருந்த அபாய எச்சரிக்கை மின்விளக்குகள் களவாடப்பட்டதால் இந்த சாலையில் இரவு நேரங்களில் பயணிக்கும் வாகனங்கள் நடுவே சுங்கச்சாவடி இருப்பது தெரியாமல் சுங்கச்சாவடி தடுப்புகளில் மோதி விபத்துக்குள்ளாவதும் தொடர் கதையாகி வருகிறது.



தற்பொழுது திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 16 வருடங்களாக அகற்றப்படாத இந்த சுங்கச்சாவடியை மீண்டும் தொடங்குவதற்கு நெடுஞ்சாலைத்துறை திட்டமிடுகிறதா என்ற ஐயம் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.



இந்நிலையில், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் அதிக அளவில் விபத்து ஏற்பட காரணமாகவும் உள்ள இந்த செயல்படாத சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து பல்லடம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது இரண்டு வழிச்சாலையாக உள்ள இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டால் இந்த சுங்கச்சாவடி அகற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...