12 பீகார் தொழிலாளர்கள் கொலை - வதந்தி பரப்பிய பாஜக பிரமுகர் மீது வழக்கு

தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக 12 பீகார் தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டதாக, சமூக வலைதளத்தில் தவறான தகவலைப் பரப்பிய உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ் என்பவர் மீது தமிழக போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



சென்னை: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தியைப் பரப்பிய பாஜக செய்தி தொடர்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டன. இது தமிழ்நாட்டில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.



விசாரணையில், இந்த வீடியோக்கள் போலியானது என்றும், இந்த வீடியோகளுக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பின்னர் உறுதி செய்யப்பட்டது.



தற்போது, தமிழ்நாட்டில் இந்தி பேசியதால் 12 பீகார் தொழிலாளர்கள், கழுத்தறுத்து கொல்லப்பட்டதாக சமூகவலைதளங்களில் தவறான தகவலை பரப்பிய உத்தர பிரதேச மாநிலம், பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ் என்பவர் மீது தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.



பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகப் பொய்யான தகவல் பரவியதை அடுத்து, காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாடு காவல்துறையை தொடர்பு கொள்ள 0421-2203313, 9498101300, 9498101320 உதவி எண்களை வெளியிட்டுள்ளது.



இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசும், பீகார் அதிகாரிகளும் இன்று மாலை ஆலோசனை நடத்துகின்றனர். மறுபக்கம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...