கோவையில் காதல் விவகாரத்தில் தந்தை, மகன் மீது தாக்குதல் - 3 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ஹரிஹரன் மற்றும் அவரது தந்தை ராஜசேகர் மீது இரும்பு கம்பி, சுத்தியல் மூலம் தாக்குதல் நடத்திய விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் மீது போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் பீளமேடு அருகே காதல் விவகாரத்தில் தந்தை மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்திய விக்னேஷ் உள்பட மூவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பீளமேடு அடுத்த அண்ணா நகர் ஆறுமுகம் லேஅவுட் பகுதியில் வசிப்பவர் ராஜசேகர். இவர் அதே பகுதியில் மெஸ் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இவரது மகன் ஹரிஹரன் (22), அவரது தந்தையின் ஓட்டலிலேயே வேலை செய்து வருகிறார். இதனிடையே இவர், ஆவராம்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அதே பெண்ணை விக்னேஷ் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் விக்கி என்ற விக்னேஷ் தனது நண்பர்கள் 2 பேருடன் ஹரிஹரன் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார்.

அப்போது ஹரிஹரனை சுத்தியலால் தாக்கிய அந்த கும்பல், அவரது தந்தை ராஜசேகரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் தந்தை, மகன் இருவரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து வீட்டிலிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு, 3 பேரும் தப்பிச்சென்றுள்ளனர்.

படுகாயம் அடைந்த ஹரிஹரன், அவரது தந்தை ராஜசேகர் ஆகியோர் அவர்களது உறவினர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காயமடைந்த ஹரிஹரன் பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், போலீசார் விக்கி என்ற விக்னேஷ் உட்பட 3 பேர் மீது கொலை முயற்சி, தாக்குதல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...