கோவை ஈஷா மையத்தை பார்வையிட்ட நாகை மாணவர்கள் - கட்டிடக்கலை கற்றல் ஆய்வுக்காக வருகை!

கோவை ஈஷா மையத்திற்கு, கட்டிடக்கலை கற்றல் ஆய்வுக்காக வருகை தந்த நாகை கீழ்வேளூர் பிரைம் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரியை சேர்ந்த மாணவர்களுக்கு கட்டிடக்கலை நுணுக்கங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


கோவை: கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தை நாகை கீழ்வேளூர் பிரைம் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பார்வையிட்டனர்.

கோவை ஈஷா யோகா மையத்திற்கு கீழ்வேளூர் பிரைம் கல்லூரியை சேர்ந்த 28 கட்டிடக்கலை மாணவர்கள் மற்றும் 2 கல்லூரி விரிவுரையாளர்கள் நேற்று வருகை தந்தனர்.

ஈஷா மைய வளாகத்தில் உள்ள சூர்ய குண்டம், நந்தி, லிங்கபைரவி, சந்திரகுண்டம், தியானலிங்க மற்றும் ஆதியோகி திருவுருச் சிலை ஆகிய இடங்களை கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர். அப்போது, அவர்களுக்கு அவ்விடங்களின் ஆன்மீக முக்கியத்துவம் குறித்து மையம் சார்பில் எடுத்துரைக்கப்பட்டது.

ஆன்மீக நோக்கத்தில் அறிவியல் ரீதியாக நுணுக்கமான கட்டிடக்கலை அம்சங்களுடன் ஈஷா யோகா மையம் கட்டப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்வேறு தரப்பட்ட மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஈஷா யோகா மையத்திற்கு வருகை தருகின்றனர்.

ஈஷாவின் கட்டிடக்கலை அம்சங்கள் மற்றும் அதன் நுணுக்கங்களை வருகை தரும் பலரும் வியந்து ரசித்து பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...