கோவை எம்.எல்.ஏ.க்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்


சசிகாலா மற்றும் பன்னீர் செல்வம் என அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கடும் குழப்பத்தில் இருந்தன. இந்த நிலையில், அந்ததந்த தொகுதி மக்கள் தங்கள் எம்.எல்.ஏ.க்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டி கூறிவந்தனர்.

சசிகலா தலைமையை பன்னீர் செல்வம்  நிராகரத்த சில மணி நேரங்களில் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத்தொகுதி உறுப்பினர் ஆறுக்குட்டி பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக களம் இறங்கினார். தொடர்ந்து, அவரது தொகுதி மக்கள் சமூக வலைதளங்கள் மூலமாகவும், நேரடியாகவும் ஆறுக்குட்டிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆங்காங்கே ஆறுக்குட்டியை வாழ்த்தும் வகையில் விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டது. 

இந்த நிலையில், கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அருண்குமார் அங்கிருந்து தப்பி கோவை வந்ததாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். 

தொடர்ந்து வடக்கு சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் அருண்குமாருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். சசிகலா அணிக்கு எதிராக நின்றதன் மூலமாக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டதாகவும் பொதுமக்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், அருண்குமார் இரு அணிக்கும் ஆதரவு தராமல் சட்டமன்ற வாக்கெடுப்பை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...