கோவையில் 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் - வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது

கோவை துடியலூர் அருகே காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 7 லட்சம் மதிப்புள்ள 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் கோவை மாவட்டம் முழுவதும் போதைப் பொருட்களை ஒழிக்க தொடர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில் சரவணம்பட்டி- துடியலூர் சாலை ஆறுமுகம் ரைஸ் மில் அருகில் தனிப்படை உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையில் வாகன சோதனை நடந்தது.

அப்போது, அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி காவல்துறையினர், சோதனை மேற்கொண்டதில் சந்தேகப்படும்படியாக இரு மூட்டைகள் இருந்தன. காவல்துறையினர் அதனை திறந்து பார்த்தபோது கஞ்சா சாக்லேட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காரை ஓட்டி வந்தவர்களை துடியலூர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.



அதில், அவர்கள் பீகாரை சேர்ந்த சந்தன்குமார்(வயது30) மற்றும் அன்ஹித்குமார்(வயது19) என்பதும், அதில் சந்தன்குமார் காளப்பட்டி பகுதியில் மளிகை கடை நடத்தி வருவதும், அங்கு சட்டவிரோதமாக கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்ய எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.



இதனைத் தொடர்ந்து, சுமார் 7 லட்சம் மதிப்பிலான 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...