மக்னா யானை எப்படி பிடிபட்டது - ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் விளக்கம்

கோவை மாநகரில் இரண்டு நாட்களாகச் சுற்றி வந்த மக்னா யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். இந்த யானை பிடிபட்டது தொடர்பாக ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் பார்கவ்தேஜா விளக்கமளித்துள்ளார்.



கோவை: கோவையில் சுற்றி வந்த மக்னா யானையைப் பிடித்தது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் பார்கவ்தேஜா விளக்கமளித்துள்ளார்.



இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, மக்னா யானை டாப்சிலிப் வனப்பகுதிகள் கடந்த பிப்ரவரி 6ம் தேதி விடுவிக்கப்பட்டதாகவும், 10 நாட்கள் வனப்பகுதிக்குள் இருந்த அந்த யானை மீண்டும் 19ஆம் தேதி அங்கிருந்து வெளியேறி விட்டது.

வனப்பகுதியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து பொள்ளாச்சி, சேத்துமடை பகுதியிலிருந்து தற்போது வரை யானையின் நடமாடத்தை 70 முதல் 100 வனத்துறையினர் கண்காணித்து வந்து தற்போது பிடித்துள்ளதாகவும், இதில் 200 வனத்துறையினர், 100 காவல்துறையினர், கோவை, ஓசூர், சத்தியமங்கலம் பகுதியிலிருந்து வனத்துறை மருத்துவர் குழுவினர் ஈடுப்பட்டதாக தெரிவித்தார்.



மேலும் பிடிப்பட்ட இந்த மக்னா யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளதாகவும், யானையை வனப்பகுதியில் எங்கு விடலாம் என, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.



யானைக் கடந்து வந்த தூரத்தில் இதுவரை எவ்வித உயிர் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும், பொருட்சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சின்னதம்பி கும்கி யானை, மக்னா யானையைப் பிடிக்க மிகவும் உதவியாக இருந்தது என்றார்.



வனத்துறை மருத்துவர் சுகுமார் பேசுகையில், இந்த மக்னா யானையை பிடிக்க 4 மருத்துவக் குழுக்கள் செயல்பட்டதாகவும், மக்னா யானையைப் பிடிக்கத் தேவையான அளவிற்கு மட்டும் மயக்க மருந்து செலுத்தியதாகவும், அந்த யானைக்கு 40லிருந்து 45 வயது இருக்கும் என்றார்.

இது மக்னா என்ற போதிலும் யாரையும் தாக்காமல் அருகில் செல்பவர்களிடமிருந்து விலகித் தான் சென்றது எனத் தெரிவித்த அவர், அது அதனுடைய குணமாக இருக்கலாம் என்றார்.

மேலும் யானையை அடர் வனப்பகுதிக்குள் விடுவித்து உணவு, குடிநீர் ஆகியவை வைத்து வனப்பகுதிக்குள்ளேயே இருக்கும்படி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தார்.

Newsletter

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...