கோவையில் பீர் பாட்டிலை உடைத்து மிரட்டி பணம், செல்போனை பறித்த இருவர் கைது!

கோவை காந்திபுரம் அருகே செயல்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்த அஜித்குமார், நாராயண பெருமாள் ஆகியோர், ஷாலின் என்பவரை மிரட்டி பணம் பறித்த நிலையில், இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் காந்திபுரம் அருகே உடன் பணியாற்றியவரை பீர் பாட்டிலை வைத்து மிரட்டி பணம் பறித்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காந்திபுரம் அடுத்த ராம் நகர் பகுதியில் பார்ச்சூன் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்களுக்காக அதே பகுதியில் வீடு ஒன்று வாடகைக்கு எடுக்கப்பட்டு அங்கு ஊழியர்கள் தங்கி இருந்து பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த ஹோட்டலில் திருநெல்வேலியை சேர்ந்த நாராயண பெருமாள், சாத்தான்குளத்தைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் குன்னத்தூர் சார்ந்த ஷாலின் ஆகியோர் தங்கியிருந்தனர். இதில் திருநெல்வேலியை சேர்ந்த நாராயண பெருமாள் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். அறையில் தங்கி இருந்தவர்களிடமிருந்து பொருட்களை திருடி அதன் மூலம் மது அருந்திவிட்டு ஜாலியாக ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஹோட்டல் நிர்வாகத்தினர் நாராயண பெருமாளை வேலையில் இருந்து நீக்கியுள்ளனர். ஆனால் அவர் சொந்த ஊருக்கு செல்லாமல் அறையிலேயே தங்கி இருந்துள்ளார். இதற்கிடையே ஹோட்டலில் பணிபுரிந்தசாத்தான்குளத்தைச் சேர்ந்த அஜித்குமார் தான் வேலைக்கு வரவில்லை சொந்த ஊருக்கு செல்கிறேன் என கூறிவிட்டு வேலையில் இருந்து நின்று விட்டார்.

ஆனால் நாராயண பெருமாளும், அஜித்குமாரும் சொந்த ஊருக்கு செல்லாமல் அறையிலேயே தங்கி இருந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை முடிந்து வந்த ஷாலினிடம் வேலையில் இருந்து நிறுத்தப்பட்ட நாராயண பெருமாள் பணம் வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் ஷாலின் தன்னிடம் பணம் இல்லை என கூறியிருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த நாராயண பெருமாள் பீர் பாட்டிலை உடைத்து ஷாலின் கழுத்தில் வைத்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அவர் அணிந்திருந்த செயின், மோதிரம் மற்றும் விலை உயர்ந்த ஆப்பிள் ஐபோன் ஆகியவற்றை பறித்துக் கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து ஷாலின் யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இதற்கிடையே தனது செல்போன் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டதாக அறையில் தங்கியிருக்கும் மற்றொரு நபரான பால தினேஷிடம் ஷாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து பால தினேஷ் நகை மற்றும் செல்போனை எதற்காக பறித்து வைத்துள்ளீர்கள் என்று நாராயண பெருமாள் மற்றும் அஜித்குமாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். பொருள்களை திருப்பி கொடுத்து விடுமாறும் எச்சரித்துள்ளார்.

இந்த விஷயம் ஹோட்டல் மேனேஜர் தேவராஜூலுக்கு தெரிய வந்த நிலையில் நேற்று மதியம் ஹோட்டல் மேனேஜர் தேவராஜூலு காந்திபுரம் மார்க்கெட்டில் இருந்து ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது செங்குப்தா வீதி அருகே நாராயண பெருமாளும் அஜித்குமாரும் நின்று கொண்டு இருந்தனர்.

அவர்களைப் பார்த்த தேவராஜூலு எதற்காக ஷாலினிடமிருந்து நகை செல்போனை பறித்து வைத்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் உதவியுடன் தேவராஜுலு, அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.

தொடர்ந்து தேவராஜுலு இது குறித்து புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் நாராயண பெருமாள்( 24 )மற்றும் சாத்தான்குளத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் அஜித்குமார் (25 )ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

அவர்களிடம் இருந்து தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...