கல்லாறு தோட்டக்கலை பண்ணையில் 61 ஆயிரம் நாற்றுகள் விற்பனைக்கு தயார்!

உதகை - மேட்டுப்பாளையம் சாலையில் கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் பல்வேறு விதமான 61,000 நாற்றுகள் குறைந்த விலையில் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை அரசு தோட்டக்கலை பண்ணையில் 61,000 நாற்றுகள் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவில் இயற்கை எழில் நிறைந்த சூழலில் அரசு தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது. ஆங்கிலேயர்களால் கடந்த 1900ஆம் ஆண்டு இந்த அரசு தோட்டக்கலை பண்ணை உருவாக்கப்பட்டது. மேலும்,இப்பண்ணையானது 122 ஆண்டுகள் பழமையானது. இந்த பழப்பண்ணை 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

சராசரியாக ஆண்டுதோறும் இப்பகுதியில் 70 முதல் 80 நாட்கள் வரை மொத்தமாக 130 சென்டி மீட்டர் முதல் 140 சென்டி மீட்டர் வரை மழை பெய்து வருகிறது. மித வெப்ப சீதோஷ்ண நிலை கொண்ட இந்த பழப்பண்ணையில் பாக்கு, சில்வர் ஓக், காபி நாற்றுகள் உள்ளன.

மேலும் மலேசியாவை தாயகமாகக் கொண்ட மங்குஸ்தான், துரியன் பழம், ரம்பூட்டான், இலவங்கம், எலுமிச்சை, நெல்லிக்காய், வெல்வட் ஆப்பிள், பலா, மலேயன் ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு வகையான பழ மரங்களும், கிராம்பு, மிளகு உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவிய பயிர்களும் இங்கு உள்ளன.

அதேபோல், அலங்காரச் செடி வகைகளான குரோட்டன்ஸ், செம்பருத்தி, இக்சோரா, பாக்கு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த பழ பண்ணையில் தயாரிக்கப்படும் நாற்றுக்கள் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கல்லாறு அரசு பழப்பண்ணையில் 61 ஆயிரம் நாற்றுக்கள் தயார் நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக இந்த பழ பண்ணையில் வாட்டர் ஆப்பிள் நாற்றுகள் ரூ.30-க்கும், சில்வர் ஓக் நாற்றுகள் ரூ.6-க்கும், மிளகு, கிராம்பு, பன்னீர் கொய்யா, மலேயன் ஆப்பிள், செர்ரி பழம், பலா, காபி மற்றும் அலங்கார செடி நாற்றுகள் தலா ரூ.10க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்காக 10 ஆயிரம் சில்வர் ஓக் நாற்றுகள் , 37 ஆயிரம் மிளகு நாற்றுகள், 240 வாட்டர் ஆப்பிள் நாற்றுகள், கிராம்பு 1,400, அலங்கார செடிகள் 1,900, பன்னீர் கொய்யா 2,000, மலேயன் ஆப்பிள் 1,800, செர்ரி பழம் 1,100, பலா 4,000,காபி 2,000 என மொத்தம் 61 ஆயிரம் நாற்றுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தேவைப்படும் விவசாயிகள் கல்லாறு பழப்பண்ணை அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என பழப்பண்ணை மேலாளர் மோகன்ராம் தெரிவித்துள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...