தேவாரம் பாடும் குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசு - சத்குரு ஜக்கி வாசுதேவ் அறிவிப்பு

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி முன்பு தேவாரம்‌ பாடும்‌ 12 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கிவாசுதேவ் அறிவித்துள்ளார்.


கோவை: கோவை பக்தி நயம்‌ ததும்பும்‌ தேவாரம்‌ பாடல்களை ஆதியோகி முன்பு பாடி அர்ப்பணிக்கும்‌ குழந்தைகளுக்கு தினமும்‌ சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று சத்குரு தெரிவித்துள்ளார்‌.

இது தொடர்பாக அவர்‌ வெளியிட்டுள்ள ட்விட்டர்‌ பதிவில்‌, தேவாரம்‌ ஆழமான பக்தி மற்றும்‌ உயிரோட்டத்தை வளர்த்து, இந்த தன்மைகளை ஒருவரது வாழ்வின்‌ அடித்தளமாக்குகிறது. ஆதியோகி முன்‌ தேவாரம்‌ பாடும்‌ 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தினமும்‌ சிறப்புப்‌ பரிசுகளை வழங்க உள்ளோம்‌! தமிழ்நாட்டுக்‌ குழந்தைகள்‌ தங்கள்‌ ஆழமான கலாச்சாரத்தை அறியவேண்டும்‌ என கூறியுள்ளார்‌.

இது தொடர்பாக ஈஷா மஹாசிவராத்திரி விழாவில்‌ பேசிய சத்குரு, "12 வயதுக்கு கீழ்‌ உள்ள தமிழ்‌ குழந்தைகள்‌ நம்‌ நாட்டில்‌ எங்கிருந்தாலும்‌, வெளிநாடுகளில்‌ இருந்தாலும்‌ இங்கு வந்து தேவாரப்‌ பாடல்‌ பாடினால்‌ அவர்களுக்கு சிறப்பு பரிசு அளிக்கப்படும்‌. இது ஆண்டு முழுவதும்‌ எந்த நாளிலும்‌, தமிழ்‌ குழந்தைகள்‌ எங்கிருந்து வந்தாலும்‌ ஆதியோகி முன்பு தேவாரம்‌ பாடிவிட்டு அவர்கள்‌ பரிசுகளை பெற்றுக்‌கொள்ளலாம்‌. கிராமங்கள்தோறும்‌ ஆயிரக்கணக்கான குழந்தைகள்‌ தேவாரம்‌ கற்றுக்கொண்டு ஆதியோகி முன்பு தேவாரம்‌ பாட நீங்கள்‌ அனைவரும்‌ உறுதி எடுத்துக்‌ கொள்ள வேண்டும்‌. இதை நாம்‌ அனைவரும்‌ நிகழ செய்ய வேண்டும்‌" எனக்‌ கூறினார்‌.

மஹாசிவராத்திரி விழா, தில்லை வாழ்‌ அந்தணர்‌ தம்‌ அடியார்க்கும்‌ அடியேன்‌' என்ற தேவாரப்‌ பாடலுடன்‌ துவங்கியது. அதேபோல்‌ விழா நிறைவு பெறுவதற்கு முன்னரும்‌ 'மாதர்‌ பிறை கண்ணி யானை' என்ற தேவாரப்‌ பாடல்‌ பாடப்பட்டது.ஈஷாவில்‌ உள்ள சம்ஸ்கிருதி பள்ளி மாணவர்களுக்கு தேவார, திருவாசகப்‌ பாடல்கள்‌ கற்றுக்‌ கொடுக்கப்படுகிறது. அதேபோல்‌ அந்த மாணவர்கள்‌ பாடி, சவுண்ட்ஸ்‌ ஆஃப்‌ ஈஷா வெளியிட்ட தேவாரப்பாடல்‌ ஆல்பம்‌ மிகுந்த வரவேற்பை பெற்றதோடு, அனைவராலும்‌ வெகுவாக பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...