தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் முனைப்பு பாஜகவிடம் இல்லை - கொங்கு ஈஸ்வரன் கருத்து!

கோவை தொட்டிப்பாளையம் அருகே செய்தியாளர்களிடம் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பாஜக தலைவர் அண்ணாமலை இதுவரை தமிழ்நாட்டிற்கு ஆக்கப்பூர்வமாக என்ன செய்திருக்கிறார்? என கேள்வி எழுப்பினார்.



கோவை: தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் முனைப்பு பாஜகவிடம் இல்லை என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விமர்சித்துள்ளார்.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் கோவை தொட்டிபாளையம் பிரிவு அருகே செய்தியாளர்களிடம் பேசியதாவது,



சேலம் - கொச்சின் சாலையில் நீலம்பூர் வரை 6 வழி சாலையாகவும், பின்னர் மதுக்கரை வரை 2 வழி சாலையாகவும் பின்னர் மீண்டும் 6 வழி சாலையாக உள்ளது. இதுவும் 6 வழி சாலையாக இருந்திருக்க வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பொள்ளாச்சி சாலை சந்திப்பில் மேம்பாலம் தேவை. மத்திய அரசு உடனடியாக நீலம்பூர் to மதுக்கரை வரை 6 வழி சாலையாக மாற்ற வேண்டும். பிப்ரவரி 26 ஆம் தேதி மதுக்கரை to நீலம்பூர் வரை என் தலைமையில் நடைபயணம் செல்ல உள்ளோம். இதன் மூலம் ஒரு அழுத்தம் கொடுக்க முடியும் என நம்புகிறேன்.

இது தொடர்பாக நாமக்கல் எம்.பி மூலம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்த 6 வழி சாலை திட்டத்தை துரிதமாக தொடங்க வேண்டும். சேலம் - உளுந்தூர் பேட்டை வரை 4 வழி சாலையாக மாற்ற கோரி ஒரு நடைபயணம் செய்தோம். அங்கு 4 வழிச்சாலைக்கு இப்போது பணி நடக்கிறது.

அதே நம்பிக்கையோடு இங்கும் நடக்க உள்ளோம். நிலம் எடுப்பு சிக்கல் கோவையில் இல்லை என நினைக்கிறேன். கேரளா, தமிழ்நாடு ஆகிய 2 மாநில மக்களுக்கும் இது பயனுள்ள சாலையாக இருக்கும்.

ஈரோடு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சிறப்பான வெற்றி பெறுவார். கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு தொடர்ந்து பாடுபடுவோம். பால் விலை உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக விழிப்புணர்வு இல்லாத மக்கள் இல்லை. மத்திய அரசு அழுத்தம் காரணமாகவே விலை ஏற்றம்.

இதனால் வாக்கு குறையும் என்ற நிலை இல்லை. விளை பொருள்களுக்கான பிரச்சினை தொடர்ந்த வண்ணமே உள்ளன. கரும்பில் இருந்து எத்தனால் எடுப்பது போல, மரவள்ளியில் இருந்து எத்தனால் எடுக்கும் முயற்சிக்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது.

உயர் மின் கோபுரம் அமைக்க நிலங்கள் கொடுத்தவர்களுக்கு விரைவில் இழப்பீடு தொகை கொடுக்க நடவடிக்கை. எந்த பிரச்னைக்கும் நீதிமன்றம் கூட செல்ல மாட்டார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிவிட்டு சென்று விடுவார். தமிழ்நாட்டிற்கு ஆக்கப் பூர்வமாக அண்ணாமலை என்ன செய்திருக்கிறார்?.



அதிமுக தேர்தல் பணிகளை தாமதமாக தொடங்கினார்கள். கொங்கு மண்ணை பொறுத்தவரையில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். எனவே நன்கு பழகி விட்டதால் மற்ற வேட்பாளர்களை பெரியளவில் வரவேற்பு இல்லாமல் இருக்கலாம்.

மக்கள் வரவேற்பு இல்லை என்றால் அங்கு வாக்கு குறைகிறது என புரிந்து கொள்ள வேண்டும். கங்கை நதியை சுத்தம் செய்ய 20 ஆயிரம் கோடி மத்திய அரசு கொடுக்கிறது. அது போல் நொய்யல், காவிரி போன்றவற்றிற்கும் கொடுக்க வேண்டும்.

நாங்கள் நடத்த உள்ள நடைபயணத்திற்கு பல்வேறு அமைப்புகளையும் அழைக்க உள்ளோம். டெல்லியில் தமிழக மாணவர்களை தாக்கியதை கண்டிக்கிறோம். டெல்லி காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசையின் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு இயக்கத்தின் செயல்பாட்டை பொறுத்து தான் மக்கள் ஆதரவு இருக்கும். தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கும் கொண்டு செல்லும் முனைப்பு பாஜகவிடம் இல்லை. பிறகு எப்படி தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...